மோதிரம் கொடுத்து காதலை சொன்ன அமீர்..எவ்வளவு நாளைக்குத்தான் இந்த காதல் நாடகம்..சீக்கிரம் முடிங்கப்பா!
சென்னை : பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அமீர், பாவ்னியிடம் மோதிரத்தை கொடுத்து தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் பாவ்னி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.
பிக் பாஸ் வீட்டிற்கு பாவ்னி வந்ததும், அவரின் க்யூட்டான சிரிப்பையும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழையும் பார்த்து ரசிகர்கள் தனியாக பாவ்னி ஆர்மியை தொடங்கினர்.

பிக்பாஸ் 5
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகப்போட்டியாளரான அபிநய்யுடன் தொடர்ந்து பேசி வந்ததால், அவர்களுக்கு இடையே காதல் இருக்குமோ என பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து, வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த டான்ஸ் மாஸ்டர் அமீருடன், காதல் ட்ராக் ஆரம்பமானது. அந்த வீட்டில் அமீர், பாவ்னி பின்னால் சுற்றி சுற்றி திரிந்து இறுதியில் காதலிப்பதாகவே கூறிவிட்டார். ஆனால், அதற்கு பாவ்னி நோ சொல்லிக்கொண்டே இருந்தார்.

அமீர், பாவ்னி காதல்
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த பிறகும், பாவ்னி எங்கே சென்றாலும் இவர்கள் காதல் விவகாரம் குறித்தே கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு எல்லாம் அழகான சிரிப்பு சிரித்து மழுப்பலான பதிலளித்து வருகிறார் பாவ்னி. ஆனால், அமீரோ எனக்கு அவங்கள புடிச்சி இருக்கு அதனால் காதலை சொன்னேன் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பாவ்னி, அமீர் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர். ஏற்கனவே இவர்களுடைய ஜோடிப் பொருத்தம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இருவரும் நடனத்திலும் கலக்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் உள்ளனர்.

அழகான புரபோஸ்
இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் அமீர், பாவ்னியிடம் எத்தனையோ முறை எனது காதலை வெளிப்படுத்திவிட்டேன். ஆனால், நீ நோ சொல்லிட்ட இந்த முறையாவது என் காதலை ஏற்றுக்கொள் என்று மோதிரத்தை கொடுத்து தனது காதலை அனைவர் முன்பும் கூற, பாவ்னி நெகிழ்ந்து போய் கண்கலங்குகிறார். பாவ்னி மோதிரத்தை வாங்கினாரா? காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பது தெரியாமல் ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

முடிவுக்கு வாங்கப்பா
மேலும் பல நெட்டிசன்ஸ் பிக் பாஸ் சீசன் 5ல் தொடங்கிய காதல் கிட்டத்தட்ட 7 மாதங்களான நிலையிலும் இவர்கள் காதலிக்கிறார்களா? நண்பர்களா என எதுவுமே சொல்லாமல் ரசிகர்களை சுற்றலில் விட்டுள்ளனர். அடுத்த பிக் பாஸ் சீசன் 6 வரப்போகுது இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இந்த காதல் நாடகம் தொடரும், சீக்கிரம் ஒரு முடிவுக்கு கொண்டு வாங்கப்பா என்று நெட்டிசன்ஸ்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











