சந்தோஷமாக கிளம்பிய வைஷ்ணவியை ஏமாற்றிய பிக் பாஸ்
Recommended Video

சென்னை: ஆத்தாடி விட்டுட்டாங்கடா என்று சந்தோஷமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவியை தனி அறையில் தங்க வைத்துவிட்டனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று யாரை வெளியேற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தால் கடந்த சீசனில் நடந்த ஒரு விஷயத்தை காப்பியடித்து பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் நிறைய பேசினார். பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வைஷ்ணவி வெளியேற்றப்படுவதாக கூறினார்.

மகிழ்ச்சி
அம்மாடி, உங்களுக்கு கோடி புண்ணியம்டா சாமி என்பது போன்று வைஷ்ணவி சந்தோஷமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார். சக போட்டியாளர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்திவிட்டு, செல்ஃபி எடுத்து பெட்டியுடன் வெளியே வந்தார். ஆனால் அவர் நினைத்தது போன்று வீட்டிற்கு அல்ல மாறாக தனி அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பாராட்டு
வைஷ்ணவி இருந்த போது எல்லாம் அவர் புறம் பேசுகிறார், அப்படி இப்படி என்று ஆயிரம் குறை கூறிய போட்டியாளர்கள் அவர் கிளம்பிய பிறகு நல்லவர் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். அப்பாடா, வைஷ்ணவி போயாச்சு இனி நிம்மதி என்று நினைத்திருக்கும் போட்டியாளர்களுக்கு வைஷ்ணவி தனி அறையில் இருப்பது தெரியாது.

சுஜா
கடந்த சீசனில் சுஜா வருணியை தனி அறையில் தங்க வைத்தனர். இந்த சீசனில் வைஷ்ணவி தங்க வைக்கப்பட்டுள்ளார். தனி அறை எப்படி இருக்கிறது என்று கமல் கேட்டதற்கு வைஷ்ணவியோ, கண்டிப்பாக எனக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது. நான் வீட்டிற்கு போகவில்லை என்பது தெரிந்து எனக்கு அதிருப்தியாக இருந்தது. அந்த வீட்டில் புறம் பேசாத ஆளே இல்லை என்றார் வைஷ்ணவி.

கமல்
தனி அறை உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும். அதன் பிறகு நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது வேறு அனுபவமாக இருக்கும் என்று வைஷ்ணவிக்கு அறிவுரை வழங்கினார் கமல். போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை பற்றி புறம் பேசுவதை தனி அறையில் இருந்து பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார் வைஷ்ணவி.


Click it and Unblock the Notifications











