பிக் பாஸ் போரடிக்கிறது என்கிறாரா காயத்ரி ரகுராம்? #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை:பிக் பாஸ் நிகழ்ச்சி போரடக்கிறது என்கிறாரா காயத்ரி ரகுராம்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. யாஷிகாவை பார்த்ததும் பிக் பாஸ் வீடு களைகட்டும் என்று நம்பிய ரசிகர்கள் ஏமாந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே தனி பொறுமை வேண்டும் போல, கொடூர மொக்கையாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர்
போர் அடிக்கிறது என்ன செய்ய என்று கேட்டு காயத்ரி ரகுராம் ட்வீட்டினார். அவரின் ட்வீட்டை பார்த்தவர்கள் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டார்கள். அதை புரிந்து கொண்ட காயத்ரி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசவில்லை என்று விளக்கம் அளித்தார்.
முதலில் நீ
என்ன செய்ய என்று கேட்ட காயத்ரியிடம் ஒருவர் செத்துவிடு என்றார். அதற்கு காயத்ரியோ, முதலில் நீங்கள் செத்துக் காட்டுங்கள் அது ஒர்க் அவுட் ஆனால் நான் முயற்சிக்கிறேன் என்றார்.
போடி
காயத்ரியின் ட்வீட்டுக்கு போடி என்று ஒருவர் கமெண்ட் போட்டார். என் ட்வீட்டுக்கே வந்து என்னை போகச் சொல்வதா, நீ தான் போகணும் என்றார் காயத்ரி.

எதிரொலி
பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் புலம்புவதை பார்த்து காயத்ரி இப்படி ட்வீட்டியிருக்கலாம். அடுத்த சீசனும் ஆரம்பித்துவிட்டது ஆனாலும் காயத்ரி செய்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை போன்று.


Click it and Unblock the Notifications











