கல்யாணம் பண்ணிக்கலாமா? கல்யாணியைக் கேட்ட பவர் ஸ்டார்

By Mayura Akilan

பீச் கேள்ர்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் பவர்ஸ்டார், தொகுப்பாளினிகளிடம் அடிக்கடி முத்தம் கேட்டதோடு, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டு அழவைத்தார்.

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் 'பீச் கேள்ர்ஸ்' நிகழ்ச்சி சினிமா பிரபலங்களின் பெர்சனல் பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்க்க வைக்கிறது.

பீச் போன்ற செட் அமைத்து அதில் கலர் ஃபுல் உடையில் கொஞ்சம் கிளமராகவும் உடையணிந்த இரண்டு தொகுப்பாளினிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிறப்பம்சம்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளரின் உடையும் கூட பீச் பகுதியில் அணிவதைப் போல இருக்கும்.

ஒரு ரவுண்டில் 5 பந்துகளை எடுத்து தொகுப்பாளரிடம் கொடுக்க வேண்டும் அதில் எழுதப்பட்டுள்ள கேள்விகளை கேட்பார்கள், யோசிக்காம பதிலை உடனே சொல்ல வேண்டும்.

கல்யாணி - பாவனா

கல்யாணி - பாவனா

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பீச் கேள்ர்ஸ் சீசன் 1ல் பாவனாவும், கல்யாணியும் இணைந்து திரை உலக பிரபலங்களை எடக்கு மடக்கான கேள்விகளைக் கேட்டு அலறடித்தனர்.

பீச் கேள்ர்ஸ் உடன் பவர் ஸ்டார்

பீச் கேள்ர்ஸ் உடன் பவர் ஸ்டார்

பீச் கேள்ர்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அதே கல்யாணியுடன் இம்முறை ரெபேக்கா இணைந்துள்ளார். நிகழ்ச்சியின் முதல் சிறப்பு விருந்தினர் பவர் ஸ்டார். இதை சமீபத்தில் பார்க்க நேரிட்டது. பவரை கலாய்க்கலாம் என்று ஆரம்பித்த நிகழ்ச்சியில் கடைசியில் தொகுப்பாளினிகளை முத்தம் கேட்டு கலாய்த்துவிட்டார் பவர் ஸ்டார்.

ஆனந்த தொல்லை, லத்திகா

ஆனந்த தொல்லை, லத்திகா

பீச் கேள்ர்ஸ் நிகழ்ச்சியில் லத்திகா, ஆனந்த தொல்லை படங்களில் நேரிட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது என்றார்.

கல்யாணம் பண்ணிக்கலாமா?

கல்யாணம் பண்ணிக்கலாமா?

புதிதாக திருமணம் ஆன கல்யாணியைப் பார்த்து, நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போகலாமா என்று கேட்டு அலறவைத்தார்.

பலகோடி இழந்தேன்

பலகோடி இழந்தேன்

இந்த பவர் ஸ்டார் என்ற பெயரை வாங்குவதற்காக நான் பலகோடி செலவழித்தேன் என்றும் கூறினார்.

ஓவர் பில்டப்

ஓவர் பில்டப்

இன்றைக்கு சினிமாவில் ஓவர் பில்டப் கொடுக்கின்றனர். என்னை கோமாளி என்று கூறுகின்றனர். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்றார்.

நிறைய ஃபேன்ஸ்

நிறைய ஃபேன்ஸ்

எனக்கு நிறைய வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கின்றனர். தீக்குளிக்கக் கூட தயாராக இருக்கின்றனர் என்றார்.

ஐ படத்தில் நான்

ஐ படத்தில் நான்

ஷங்கரின் ஐ படத்தில் நடித்தது எனக்கு கனவு போல இருக்கிறது. என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினார் ஷங்கர். என்னுடைய ரசிகர் என்று அவர் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார் பவர் ஸ்டார்.

அம்பெறிந்த பவர்

அம்பெறிந்த பவர்

மற்றொரு ரவுண்டில் பலூன்களை அம்பு கொண்டு எரிய வேண்டும், பலூனை உடைத்து அதன் உள்ளே பங்கேற்பாளருக்கு தெரிந்த ஒருவர் இருப்பார், அவரை பற்றி இதுவரை மீடியா அறிந்திராத ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். பவருடன் வேடிக்கையாகப் போனது இந்த நிகழ்ச்சி சிம்பு, சிவா என தன்னுடன் நடித்த நடிகர்களைப் பற்றி ரகசியங்களை கூறினார் பவர். கமலுடன் நடிக்க ஆசை என்று கூறினார்.

ஐஸ்வர்யா உடன் நடிக்க ஆசை

ஐஸ்வர்யா உடன் நடிக்க ஆசை

ஐஸ்வர்யா உடன் ஜோடியாக நடிக்க ஆசை. அவருடன் டூயட் பாடவேண்டும் என்று கூறி தொகுப்பாளினிகளை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் அதிரவைத்தார். அதற்காக பரிசும் பெற்றார் பவர்.

பஞ்ச் டயலாக்

பஞ்ச் டயலாக்

கரண்டை தொட்டாத்தான் ஷாக்கடிக்கும்... பவரைப் பார்த்தாலே ஷாக்கடிக்கும் இது பவர் சொன்ன பஞ்ச் டயலாக். கடைசியில் தொகுப்பாளினிகளுடன் நடனம் ஆடிவிட்டுத்தான் நிகழ்ச்சியை முடித்தார் பவர்.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்கள்

பீச் கேள்ர்ஸ் நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் மட்டுமல்லாது நிரோஷா, பாடகி சின்னப்பொண்ணு என பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனாலும் பவரைப் போல களை கட்டவில்லைதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X