Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அழகாய் இருக்கும் அசத்தல் தொகுப்பாளினிகள்…
தமிழ் தொலைக்காட்சிகளில் சில தொகுப்பாளினிகளை பார்ப்பதற்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார்கள். அழகுத் தொகுப்பாளினிகளின் படபடக்கும் பேச்சும், அவர்களின் உரையாடலும் ரசிகர்களை கவரும்.
90களில் ஒருசில சேனல்கள் மட்டுமே இருந்தன. பெப்ஸி உமா, மாலா மணியன், ராதிகா பாலா என சில தொகுப்பாளினிகளுக்கு சில ரசிகர்கள் இருந்தார்கள்.
இன்றைக்கு 20க்கும் மேற்பட்ட தமிழ்சேனல்கள் இருக்கின்றன. அதில் வரும் பல தொகுப்பாளினிகள் அழகாய் உடுத்தி, அழகாய் சிரித்து, அழகாய் பேசி ரசிகர்களை கவர்கின்றனர். இதுவே நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு காரணமாகிவிடுகிறது.
அழகான, அசத்தல் தொகுப்பாளினிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
ஐஸ்வர்யா
அழகாக பேசுவது மட்டுமல்லாது அசத்தலாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஐஸ்வர்யா, சீரியலிலும் நம்பர் 1 ஆக வலம் வருகிறார். சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தாலும் ஜெயா டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.
திவ்யதர்சினி
விஜய் டிவியின் அழகுத் தொகுப்பாளினி திவ்யதர்சினி. நம்ம வீட்டுக் கல்யாணம், ஜோடி, என பல நிகழ்ச்சிகளை வாய் ஓயாமல் பேசி தொகுத்து வழங்குகிறார். டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதார்ஷினி.
பாவனா
சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் பாவனாவின் உடைகளைப் பார்க்கவே தனி ரசிகர்வட்டம் இருக்கிறது. பாவனாவின் ஸ்டைலான பேச்சும், நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகரிக்கச் செய்கிறது.
ரம்யா
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரம்யா அசத்தல் அழகுத் தொகுப்பாளினி என்று பெயரெடுத்தவர்.
பிரியதர்ஷினி
திவ்யதர்ஷினியின் சகோதரி பிரியதர்ஷினி சன் டிவியில் இருந்து கலைஞர் டிவியில் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இப்போது நம்ம வீட்டுக் கல்யாணத்தை தொகுத்து வழங்குகிறார். பத்தாண்டுகளுக்கு மேலாக அழகு நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வலம் வருகிறார் பிரியதர்ஷினி.
லதா ராவ்
நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து சீரியலில் நடித்திருக்கின்றனர். ஆனால் சீரியலில் நடிக்க வந்து இப்போது சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் லதா ராவ். அழகான பேச்சும், அசத்தலான உடையும் நிகழ்ச்சிக்கு கூடுதல் அழகினைத் தருகிறது.