அழுதாலும் அழகாய் தோன்றும் சீரியல் ஹீரோயின்கள்

By Mayura Akilan

2013ம் ஆண்டில் சினிமாவில் பல ஹீரோயின்கள் அறிமுகமானதைப் போல சீரியலும் சில ஹீரோயின்கள் அறிமுகம் ஆகியுள்ளனர். அட அழகா இருக்கே இந்த பொண்ணு என்று இல்லத்தரசிகளே ரசிக்கும் அழவிற்கு சில சீரியல் நடிகைகள் இருக்கத்தான் செய்கின்றனர்.

சினிமாவில் இருந்து வந்த ஸ்ருதிகா வாகட்டும், சீரியலுக்கு நேரடியாக வந்த லட்சுமியாகட்டும் சீரியலில் அழுதாலும் தனி அழகோடுதான் காட்சி தருகின்றனர்.

நிகிலா ராவ் தொடங்கி பொம்மலாட்டம் சிரிஜா வரை தனி ரசிகர் வட்டம் உண்டு. 2013ல் சீரியலில் இல்லத்தரசிகளைக் கவர்ந்த நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

நிகிலா ராவ்

நிகிலா ராவ்

சன் டிவியில் வாணி ராணி தொடரில் ராணியின் மகள் செல்வியாக நடிக்கும் நிகிலாவின் க்யூட் நடிப்பிற்கு நிறைய ரசிகர்கள் உண்டாம்.

தங்க மீனாட்சி

தங்க மீனாட்சி

ஆரம்பத்தில் அழுக்காக மேக் அப் போட்டு ஜோதியாக நடித்த இந்தப் பெண் இளவரசி தொடரில்தான் அழகான மகாவாக நடித்தார். அப்போதே அட யாரு இந்தப் பொண்ணு என்று கேட்க வைத்தவர் சரவணன் மீனாட்சியில் தங்க மீனாட்சியாக இன்னும் அழகாக நடிக்கிறார்.

லட்சுமி

லட்சுமி

ஆபிஸ் தொடரில்தான் லட்சுமியின் நடிப்பும், அழகும் பேசப்பட்டது. அதே லட்சுமி தாயுமானவன் தொடரிலும் அதே அழகோடு, சிரிப்பும், பேச்சுமாய் நடிப்பில் அசத்துகிறார்.

வாணி போஜன்

வாணி போஜன்

தெய்வமகள் தொடரில் சத்யாவாக நடித்து அசத்தும் வாணி போஜன் சூப்பர் ஹீரோயின் என்று பெயரெடுத்திருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளதாம்.

சூசன்

சூசன்

தென்றல் தொடரில் ஆட்டோ கல்யாணியாய் அறிமுகமான சூசன் ஆபிஸ் தொடரில் மாடர்ன் மங்காத்தாவாக நடிக்கிறார். அசால்டான நடிப்புக்கு தனி ரசிகர்கள் வட்டம் உண்டு என்கின்றனர்.

ராஜீ

ராஜீ

ஆபிஸ் தொடர் நாயகிதான் ராஜீ, தென்றலில் துளசியாக நடிப்பதும் இவர்தான். ஸ்ருதியாக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தொலைக்காட்சி நேயர்களுக்கு அறியப்பட்ட பெயர் துளசி அல்லது ராஜீ. கடந்த 3 ஆண்டுகாலமாக அதிகமாய் அழுதது இவராகத்தான் இருக்கும் ஆனாலும் அழகுதான் என்கின்றனர் ரசிகர்கள்.

மலர்

மலர்

சினிமாவில் அறிமுகமான ஸ்ருதிகா நாதஸ்வரம் சீரியலில் நடித்த பின்னர் எல்லோரும் அழைப்பது மலர்தான். புடவையில்தான் நடிக்கிறார் என்றாலும் அழகுதானாம். மாமியாரிடம் திட்டு வாங்கும் போதும் சரி, கணவரிடம் கொஞ்சும் போதும் சரி அழகுதான் என்கின்றனர்.

பாரதி

பாரதி

பொம்மலாட்டம் நாயகி பாரதிக்கு தமிழில் இதுதான் முதல் சீரியல். கொஞ்சல் பேச்சு, கம்பீரமான நடிப்பும் கைகொடுக்கிறது.

ரம்யா

ரம்யா

மதுரை சீரியலில் நடித்தாலும் அதிகம் அறியப்பட்டது சரவணன் மீனாட்சி தொடரில்தான். முத்தாரம் தொடரிலும் நடித்த ரம்யா கொஞ்சம் கூடுதல் அழகுதான் என்கின்றனர் ரசிகர்கள்.

பூஜா

பூஜா

குட்டிப் பெண் பூஜா திருமணத்திற்குப் பின்னர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். வள்ளி, முந்தானை முடிச்சு போன்ற தொடர்களில் அழுகையோடு அழகாகவும் நடிக்கிறார்.

மகேஸ்வரி

மகேஸ்வரி

நிகழ்ச்சித் தொகுப்பாளரான மகேஸ்வரி திருமணத்திற்குப் பின்னர் சின்ன இடைவெளி விட்டு ஹீரோயினாக தாயுமானவன் சீரியலில் நடித்தார். சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு புதுக்கவிதையாய் தொடர்கிறது.

வள்ளி

வள்ளி

வள்ளி தொடரில் ஆரம்பத்தில் நடித்த உமாவிற்கு பதிலாக இப்போது புதிய முகமாய் வந்துள்ள வள்ளியின் அழகும், நடிப்பும் இல்லத்தரசிகளைக் கவர்ந்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X