2014ல் ரொமான்ஸ் ஜோடிகளின் செல்லச் சண்டைகள்: இவங்க சண்டை எப்ப ஓயும்?

By Mayura Akilan

தமிழ் சீரியலோ இந்தி டப்பிங் சீரியலோ காதல் ஜோடிகள், தம்பதிகளிடையே ரொமான்ஸை விட சண்டைகள் தான் அதிகம் இருக்கிறது. இரண்டு எபிசோடில் ரொமான்ஸ் செய்தால் 50 எபிசோடுகள் சண்டைதான் போடுகின்றனர். செல்ல சண்டைகளும், அதைத் தொடர்ந்து வரும் ரொமான்ஸ்காட்சிகளும் சினிமாவை விட சீரியலில் சூப்பர் என்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.

சன் டிவியில் 18 சீரியல்கள், விஜய் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ் டிவி, ஜெயா டிவி, புதுயுகம், வேந்தர் டிவி என பல டிவி சேனல்கள் இருந்தாலும் மக்களை கவர்ந்த தென்னவோ சில டிவி சீரியல்கள்தான். அதிலும் ஆண்டுக்கணக்கில் நடிப்பதால் ஜோடிகளின் சொந்தப் பெயர் மறந்து போய் சீரியல் பெயரே நிலைத்து விடுகிறது. எந்த ஜோடி அதிகம் சண்டை போடுகிறது? யாருடைய ரொமான்ஸ் சூப்பராக இருக்கிறது? சீரியல் ரசிகர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

பிரகாஷ் – சத்யா

பிரகாஷ் – சத்யா

சன் டிவியின் தெய்வமகள் சீரியலின் இளம் தம்பதியர் பிரகாஷ் - சத்யா. மோதலில் தொடங்கி எதிர்பாரத சமயத்தில் திருமண பந்தத்தில் இணைந்த இந்த ஜோடியினர் சமாதானமாக இருந்த நாட்களை விட சண்டை போட்ட நாட்கள்தான் அதிகம். இப்போது மீண்டும் ரொமான்ஸ் செய்ய தயாராகி வரும் பிரகாஷ் - சத்யா ஜோடியை எப்படி பிரிக்க வேண்டும் என்பதுதான் அண்ணியின் திட்டம்.

சக்தி சரவணன் – தங்கமீனாட்சி

சக்தி சரவணன் – தங்கமீனாட்சி

சீரியலில் சண்டை போட்டு சண்டை போட்டு சமாதானம் ஆவது சரவணன் மீனாட்சியில் வரும் சக்தி சரவணன் - தங்க மீனாட்சி ஜோடிதான்

தமிழ் – துளசி

தமிழ் – துளசி

ஆயிரத்து 300 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ள தென்றல் தொடரில் 500 எபிசோடுகள் வரை சண்டை போட்டிருப்பார்கள் தமிழும் துளசியும் ஆனாலும் அவ்வப்போது இந்த ஜோடியின் அதீத ரொமான்ஸ் அந்த சண்டைகளை மறக்கடித்து விடும்.

கவுதம் – பூஜா

கவுதம் – பூஜா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி சீரியலில் காதலின் போதே அதிகம் மோதிக்கொண்டது கவுதம் பூஜா தான். இவர்களின் திருமணமே ஒரு விபத்து போலவே நிகழ்ந்து இப்போது ஒருவழியாக சமாதனம் ஆகியுள்ளனர். அதற்குள் இந்த ஜோடிக்கு தனி ஃபேஸ்புக் பக்கமே தொடங்கிவிட்டனர் சீரியல் ரசிகர்கள்.

கார்த்திக் – ராஜி

கார்த்திக் – ராஜி

விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் ரொமான்ஸ் ஜோடி கார்த்திக் - ராஜி, கடந்த ஆண்டு சிறந்த ரொமான்ஸ் ஜோடி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்த ஜோடி இந்த ஆண்டு சண்டை போட்டு விவாகரத்து வரை சென்றுள்ளனர். இன்றைக்கு அனைத்து சீரியல்களிலும் விவகாரத்துக்கு அப்ளை செய்வது பேஷனாகவே போய்விட்டது. பின்னர் ஒருவழியாக ராசியாகி இணைந்து விடுவார்கள். இந்த ஜோடி 2015ஆம் ஆண்டில் இணைந்து விடுவார்களா? பார்கலாம்.

கோபி – மலர்

கோபி – மலர்

சன்டிவியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடரின் முக்கிய ஜோடி மலர் - கோபி. சீரியஸாக ஒருமுறை கூட சண்டை போட்டதே இல்லை இந்த ஜோடி. ஆனாலும் அநியாயத்திற்கு மனைவி மேல் பாசம் அதிகம். கர்ப்பிணி மனைவிக்கு மிளகாய் வற்றல் துவையல் அரைத்துக் கொடுப்பது தொடங்கி கை கால் பிடித்து விடுவது வரை ஒரே ரொமான்ஸ்தான்.

வள்ளி – விக்கி

வள்ளி – விக்கி

வள்ளி தொடரின் நாயகன் நாயகி வள்ளி, விக்கி ஆரம்பத்தில் இருந்தே ஒரே சண்டைதான். ஒருவழியாக சமாதானமாகி ஹனிமூன், ஃபர்ஸ்ட் நைட் என்று ரொமான்ஸ் அமர்களப்படுகிறது. ஆனாலும் அது நடந்தபாடுதான் இல்லை.

ஆண்டாள் – அழகர்

ஆண்டாள் – அழகர்

காதலும் மோதலுமாய் தொடர்கிறது ஆண்டாள் அழகரின் ரொமான்ஸ். இவர்களின் சண்டையில் காதலனை கைநீட்டி அடித்தது கூட சீரியசாகிவிட்டது.

கார்த்திக் – பூங்கொடி

கார்த்திக் – பூங்கொடி

வாணி ராணியில் அத்தை மகள் பூங்கொடியை காதலித்து திருமணம் செய்து கொண்ட கார்த்திக் ஆரம்பம் முதலே போராட்டம்தான். பின்னர் பூங்கொடி இறங்கி வர கார்த்திக் முறுக்க இப்போதான் சமாதானம் ஆகி ரொமான்ஸ் ஆரம்பமானது யார் கண் பட்டதோ மறுபடியும் சோக்கீதம் பாட வைத்துவிட்டனர்.

விஷ்ணு - லட்சுமி

விஷ்ணு - லட்சுமி

ஆபிஸ் சீரியலில் விஷ்ணு - லட்சுமி ரொமான்ஸ் காட்சிகள் அலாதியானது. இந்தஜோடி பிரிந்து பின்னர் சேர்ந்து மீண்டும் பிரிந்துள்ளனர். மறுபடியும் சேருவார்களா? சீரியல் டைரக்டருக்குத்தான் வெளிச்சம்.

ஸ்டாலின் – ரம்யா

ஸ்டாலின் – ரம்யா

ஆண்டாள் அழகரில் உள்ள இரண்டு காதல் ஜோடிகளில் ஸ்டாலின் - ரம்யாவின் ரொமான்ஸ் மயிலிறகு வருடுவதைப்போல மென்மையான கதையாக போய்க்கொண்டிருக்கிறது. இனி போக போகத் தெரியும் இவர்களின் காதல் கதை.

கதிர் – தேவி

கதிர் – தேவி

திடீரென கதிரை திருமணம் செய்து கொண்ட பணக்கார பெண் தேவி. மாய்ந்து மாய்ந்து காதலித்து பின்னர் பிரிந்து இப்போது மீண்டும் காதல் மலரும் போது ஊடல் உருவாகியுள்ளது. மீண்டும் இணைவார்களா? ரொமான்ஸ் மலருமா பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X