twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’பெட்டர் ஹாஃப்’ காதலியிடம் சாப்பிட்ட பில்லுக்கு பாதி பணம் கேட்ட காதலன், அடேய்: நீயா நானா சுவாரஸ்யம்

    |

    சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் ராசியில்லாத ராஜா, ஆண்கள்-பெண்கள் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நகர்ந்தது.

    பேப்பரில் போன் நம்பரை எழுதி பெண்ணின் காலடியில் போடுவது, டைம் கேட்பது, ஸ்கூட்டியில் கவிதை எழுதி வைப்பது, பாட்டுப்பாடி காதலை வரவழைப்பது என 80-ளின் டெக்னிக்கில் இன்றைய இளம் தலைமுறை பையன்கள் இருப்பதாக சொன்னார்கள்.

    ஒன்றாய் சேர்ந்து ஆடிய போது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சி அதனால் காதலை சொல்லப்போனேன் அந்தப்பெண் வேறு ஒருவரை காதலிக்கிறார் என்றார் ஒரு பையன்.

    நீயா நானாவில் இந்த வாரம் என்ன டாப்பிக் தெரியுமா? வெளியான அட்டகாச புரமோ.. ரக்கட் பாய்ஸ் புலம்பல்! நீயா நானாவில் இந்த வாரம் என்ன டாப்பிக் தெரியுமா? வெளியான அட்டகாச புரமோ.. ரக்கட் பாய்ஸ் புலம்பல்!

     1980 காலத்திய மன நிலையில் வாழும் இளைஞர்கள்

    1980 காலத்திய மன நிலையில் வாழும் இளைஞர்கள்

    அப்டேட் இல்லாத ஆண்களும் குறை சொல்லும் பெண்களும் என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயர் வைத்திருக்கலாம். இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் காதலில் ஜெயிக்க முடியாத ராசியில்லாத ராஜா ஆண்கள்- பெண்கள் என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இது ஒரு சுவாரசியமான தலைப்பு என்பதால் கலகலப்பாக சென்றது. இதில் பேசிய ஒரு முக்கியமான டாபிக் இன்றைய இளைஞர்கள் அவுட் டேட்டடாக இருப்பதை காட்டியது.

     ஆரம்பத்திலிருந்தே நகைச்சுவையாக நகர்ந்த நிகழ்ச்சி

    ஆரம்பத்திலிருந்தே நகைச்சுவையாக நகர்ந்த நிகழ்ச்சி

    நீயா நானா நிகழ்ச்சி வாரந்தோறும் பல விஷயங்களை அலசுகிறது. அதில் சில நிகழ்ச்சியில் வரும் பங்கேற்பாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் ஆதரவு, எதிர்ப்பு விமர்சனங்கள் பரவி வருவதை பார்க்கிறோம். இந்த வாரம் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் ஒரு ஜாலியான சப்ஜெக்ட். காதலில் வெல்ல முடியாத ராசி இல்லாத ராஜாக்கள், கேர்ல்ஸ் அண்ட் பாய்ஸ் என்று கொடுத்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே நகைச்சுவையாக செல்ல தொடங்கியது இந்த நிகழ்ச்சியில் ஒரு மைய கருத்தாக சொல்ல வேண்டியது இன்றைய இளம் தலைமுறையினர் எந்த வகையான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைத்தான்.

     பாட்டி பாடியே கொல்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்

    பாட்டி பாடியே கொல்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்

    இன்னொரு பெண் பேசும் பொழுது "சார் ஒரு பையன் என்னை பாட்டு பாடியே கொல்கிறார், பாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அவர்கள் பாடுகிறார்கள். எங்களால் தாங்க முடியவில்லை. இவர்கள் கவிதை என்கிற பெயரில் எழுதுவதை பார்த்து எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். இன்னொரு பெண் சொல்லியது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, "சார் நானும் என் என்னை காதலிக்கிறேன் என்று சொன்னவரும் ஒரு ஓட்டலில் சாப்பிடுகிறோம் அந்த ஓட்டலில் சாப்பிட்ட பின் வரும் பில் தொகையை ஆளுக்கு பாதியாக ஷேர் செய்து கொள்ளலாம் என்று அந்த இளைஞர் சொல்கிறார் இவரை எப்படி சார் நம்புவது என்று கேட்டார்" இதற்கு பதில் அளித்த இன்னொரு இளைஞர் "ஏன் ஷேர் செய்து கொண்டால் என்ன தப்பு நீங்களும் சம்பாதிக்கிறீர்கள் நாங்களும் சம்பாதிக்கிறோம் ஆளுக்கு பாதி ஷேர் செய்யலாமே" என்று கேட்டது அதிர்ச்சியாக இருந்தது.

     பெட்டர் ஹாஃபுக்கு பில் தொகையில் பாதி பணம் கேட்ட இளைஞர்

    பெட்டர் ஹாஃபுக்கு பில் தொகையில் பாதி பணம் கேட்ட இளைஞர்

    ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று நினைப்பவர், தன்னுடன் வாழ்நாளில் பாதியை பகிர்ந்து கொள்ளும் பெட்டர் ஆஃபின், ரெஸ்டாரெண்ட் பில் தொகையில் பாதியை ஷேர் செய்ய சொல்பவரை எந்தப்பெண் விரும்புவார்? வாழ்க்கையிலே பாதிய பகிர்ந்துக்கிறேன்னு நினைக்கிற அவரு பில் தொகையில் கணக்குப் பார்த்தால் பெண்ணுக்கு பயம் வரத்தானே செய்யும். இது மாதிரி காலத்துக்கு ஒவ்வாத பழைய காலத்து ஸ்டைல்ல பூவை கொடுத்து பெண்ணை கவர் பண்றது, போன் பண்ணி பேசி பேசி என்ன காதலிக்கலாம் நினைப்பது, பாட்டு பாடி, கவிதை எழுதி காதல் பண்றது, இது மாதிரி மனநிலையில் இருக்கிற இளைஞர்களுடைய வெளிப்பாடாக நேற்றைய நிகழ்ச்சி பெரும்பாலும் இருந்தது.

     சினிமாவில் பின் தொடர்தல் பிரச்சினையை யதார்த்த வாழ்வில் அப்ளை செய்யும் இளைஞர்கள்

    சினிமாவில் பின் தொடர்தல் பிரச்சினையை யதார்த்த வாழ்வில் அப்ளை செய்யும் இளைஞர்கள்

    இது போன்ற எண்ணங்கள் சினிமாவில் காலகாலமாய் பின் தொடர்தல் என்று சொல்வார்கள், பெண்ணை பின்தொடர்ந்து அவளை வற்புறுத்தி காதலிக்க வைப்பது (சினிமாவில் அது நடக்கும்) போன்ற காட்சிகளை பார்த்து அதை நிஜ வாழ்க்கையிலும் முயற்சி செய்வதன் வெளிப்பாடுதான் இன்றைய இளம் தலைமுறையினரின் எண்ணமாக இருந்ததை நேற்று பதிவு செய்தார்கள். இப்படி அவுட்டேட்டட் ஆண்களும் விமர்சிக்கும் பெண்களும் உள்ள நிகழ்ச்சியாக தான் நேற்றைய நிகழ்ச்சி இருந்தது. சில பெண்களின் கேள்வி சிறப்பாக இருந்தது, "நீ ஏன் காதலிக்க வேண்டும் என்று நினைக்கிறாய்" என்று ஒரு பெண் கேட்டார். சரியான கேள்வி. காதலிச்சே ஆகணும் என்று ஏன் நினைக்கிறாய் அது இயல்பாக நடக்கும் நடக்காமல் போகலாம் ஆனால் நீ அது நடக்கவேண்டும் என்று பதற்றத்தால் இப்படி மனம் உடைகிறாய் என்பதாக அந்த கேள்வி இருந்தது.

    English summary
    The 'Rasi illa Raja', the men-women show moved interestingly on Neeya Nana. They said that today's young generation of boys have 80's technique of writing phone number on paper and putting it on girl's feet, asking time, writing poetry on scooty, singing to attract love. When we danced together, the chemistry worked out, so I went to say love. A guy said the girl is in love with someone else.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X