விஜய் டிவி விஷால்,ரியாவின் காதல் விவகாரம்..பிரேக்கப்பாக இதுதான் முக்கிய காரணம்?
சென்னை : விஜய் டிவி சீரியல் பிரபலங்களான நடிகர் விஷால் மற்றும் ரியாவின் காதல் முறிவுக்கான முக்கிய காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
Recommended Video
விஜய் டிவி தொலைக்காட்சிக்கு என்றாலே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதில், ஒளிபரப்பாகும், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என எதுவாக இருந்தாலும் அதை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.
இதில்,எந்த அளவிற்கு நிகழ்ச்சி வரவேற்பை பெருகிறதோ, அதை விட அதிகமாக நடிகர் நடிகைகளும் கிசுகிசுக்களில் சிக்கி விடுகின்றனர்.

காதல் கிசுகிசு
காதல் வந்து விட்டால், பகலில் நட்சத்திரம் தெரியும், கிறுக்கனும் கவிஞன் ஆவான் என்று, காதலிக்கும் சில இளசுகள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். அதிலும், முதல் சீரியலோ,முதல் படத்திலோ இணைந்து நடித்து விட்டால், காதல் உடனே பற்றிக்கொள்கிறது. அப்படி ராஜா ராணி சீசன் 1ல் இணைந்து நடித்த ஆலியா மானசா, சஞ்ஜீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்

உண்மை இல்லை
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக காதல் கிசுகிசுவில் சிக்கியது பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருண் மற்றும் ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனா தான். இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதில் உண்மை இல்லை என்று அர்ச்சனா வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.

பிரேக்கப்
இதை தொடர்ந்து பாக்கிய லட்சுமி சீரியலில் நடித்து வரும் எழில் மற்றும் ராஜா ராணி சீரியல் நடிகை ரியா ஆகியோர் காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் இருவருமே இந்த கருத்துக்கு எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்து வந்தனர். இதுவும் வழக்கமான வதந்திதான் என அனைவரும் நினைத்த நிலையில், ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால், சில வாரங்களுக்கு முன்பு தான் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

இதுதான் காரணம்
இதனால், இணையவாசிகள் பலரும் ரியாவை தான் விஷால் காதலித்து வந்துள்ளார் என்றும், அவர்கள் இருவரும் தான் பிரேக் அப் செய்துவிட்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கான காரணம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஷால், ரியா இருவருக்கும் இடையேவும் அடிக்கடி ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டை வருமாம். இதனால், இருவருமே தங்களுக்குள் இனி செட் ஆகாது என பேசி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











