பாக்கியலட்சுமி சீரியல் ஓவர்.. உருகிப்போன நடிகை.. நடிகரை எவ்வளவு புகழ்ந்திருக்கிறார் பாருங்க
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மொத்தம் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பாகியது. அந்த சீரியலுக்கு தமிழ்நாட்டில் ஏராளமான குடும்பத்தினர் ரசிகர்களாக இருக்கிறார்கள். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்த சீரியல் சமீபத்தில் நிறைவு பெற்றது. இத்தனை வருடங்களாக ஒரே குடும்பம் போல் பழகிவந்த அந்த சீரியலில் நடித்தவர்கள் இப்போது உருக்கத்துடன் பேசிவருகிறார்கள்.
தமிழ்நாட்டில் சீரியல்களுக்கு என்று எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. காலையில் ஆரம்பிக்கும் சீரியல்கள் இரவில்தான் மூடுவிழா நடத்தும். அதுவரை விடாமல் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் இருக்கிறது என்பது அனைவருமே அறிந்தது. அப்படி ஏகப்பட்ட சீரியல்கள் தமிழ்நாட்டில் பெரிய ஹிட்டடித்திருக்கின்றன. மெட்டி ஒலி, கோலங்கள் என ஏராளமான சீரியல்கள் இன்னமும் மக்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன.
பாக்கியலட்சுமி: அந்த வரிசையில் இணைந்திருந்ததுதான் பாக்கியலட்சுமி சீரியல். மொத்தம் ஐந்து வருடங்கள் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டது. எல்லோருமே அந்த சீரியலை தவறாமல் பார்ப்பார்கள். டிஆர்பி ரேட்டிங்கிலும் மதிக்கத்தக்க நம்பர்களைத்தான் பாக்கியலட்சுமி வாங்கியது. சூழல் இப்படி இருக்க ஐந்து வருடங்கள் டெலிகாஸ்ட் ஆன அந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது.

நேஹாவின் பதிவு: இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகை நேஹா தன்னுடன் நடித்த விஷால் குறித்து உருக்கத்துடன் பேசியிருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் முன்பே சொல்லியிருக்கிறேன் பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங்கில் இந்த ஆறு வருடங்களில் எனது வாழ்க்கையின் முக்கியமானவராக மாறிய ஒருவரை சந்தித்தேன். அவர் என் மோசமான நிலைமையை பார்த்திருக்கிறார். எனது கஷ்டங்களில் உடன் நின்றிருக்கிறார்.
விட்டுக்கொடுத்ததே இல்லை: ஒருமுறைகூட விட்டுக்கொடுத்ததில்லை. அவர் எனது பயணத்தை பார்த்தது மட்டுமில்லாமல் முழு மனதுடன் இடம் கொடுத்தார். எனக்கு பிடித்த மனிதர். அப்படித்தான் எப்போதும். அவர்தான் எனது இனியாவுக்கான எழில். என் லட்டுக்கோவுக்கு விஷால். அவர் சீரியலிலிருந்து முன்னதாகவே சென்றுவிட்டார். அதனால் இறுதி அத்தியாயத்தின்போது எங்களுடன் இருக்க முடியவில்லை.
காலத்துக்கும் அப்பாற்பட்டவை: சில உறவுகள்தான் திரையை தாண்டி, கதையை தாண்டி காலத்துக்கும் அப்பாற்பட்டவை. அவற்றில் ஒன்றுதான் இது. நாம் உருவாக்கிய நினைவுக்ள் எனது இதயத்தில் என்றும் வாழும். வரும் காலங்களில் உங்களுக்கு நல்லதுதான் நடக்கும். நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியை பரப்புங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











