வெளியில் போங்க கோபி.. ராதிகாவின் அதிரடி முடிவு.. நிறைவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி தொடர்!

சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் சேனலின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக மாறியுள்ளது.

அடுத்தடுத்த ட்விஸ்ட்கள், சிறப்பான ப்ரமோக்கள், ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போடும் காட்சிகள், சிறப்பான திரைக்கதை என களைக்கட்டி வருகிறது.

தொடரில் தன்னுடைய காதலி, மனைவி மற்றும் குடும்பத்தினரிடையே தன்னுடைய காதல் தெரியாத வகையில் தொடர்ந்து கோபி தப்பி வருகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் சிறப்பான தொடர்களில் பாக்கியலட்சுமி தற்போது முன்னிலை பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்சுடன் இணைந்து மகா சங்கமம் நடத்தப்பட்ட நிலையில் சேனலின் டிஆர்பியில் முதலிடத்தில் தொடர் காணப்படுகிறது. ஆயினும் மொத்தமாக தொடர்களின் டிஆர்பியில் 4வது இடத்திலேயே உள்ளது.

சேனலில் முதலிடம்

சேனலில் முதலிடம்

முதல் மூன்று இடங்களில் சன் டிவியின் கயல், வானத்தை போல மற்றும் சுந்தரி தொடர்கள் பிடித்துள்ளன. ஆயினும் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட மற்ற தொடர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில வாரங்களாக முன்னேறி வருகிறது. குறிப்பாக இந்தத் தொடரின் கோபி கேரக்டர் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

வருத்தத்தில் சதீஷ்

வருத்தத்தில் சதீஷ்

கடந்த வாரத்தில் இதுகுறித்து பேசிய கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ், தன்னை வெளியில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் திட்டுவதாகவும், இதை தொடராக மட்டுமே பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ராதிகாவுடனான தன்னுடைய காதலை இருதரப்பிலும் இருந்து மறைக்க அவர் செய்யும் தகிடுதத்தங்களே கதையின் வெற்றி.

மகா சங்கமம்

மகா சங்கமம்

கடந்த வாரத்தில் மகா சங்கமத்தில் கோபி குறித்த விஷயத்தை அறிந்துக் கொள்ளும் மூர்த்தி மற்றும் தனம், இந்த விஷயத்தை ராதிகாவிடம் கூறிவிடுகின்றனர். இதையடுத்து கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் வலுக்கட்டாயப்படுத்துகிறார். கோபி எதை சொல்லி சமாளித்தாலும் அவர் சமாதானம் ஆகவில்லை.

மகளை அடிக்கப்பாயும் கோபி

மகளை அடிக்கப்பாயும் கோபி

இந்நிலையில் வாய் பேச முடியாமல் திண்டாடும் கோபியின் அப்பா தட்டுத்தடுமாறி ஒரு சில வார்த்தைகளை பேச முற்படுகிறார். இதை கோபியின் மகள் இனியா வீடியோவாக எடுத்து கோபிக்கு காட்ட முற்படுகிறார். ஆனால் ராதிகாவால் டென்ஷனில் இருக்கும் கோபி, அதை பார்க்காமல் தவிர்க்க பார்க்கிறார்.

புதிய ப்ரமோ

புதிய ப்ரமோ

தொடர்ந்து இனியா வற்புறுத்த, அவர் இனியாவை அடிக்க பாய்கிறார். இந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இனியாவை யாராவது எதாவது கூறினாலும் அவருக்கு கோபி சப்போர்ட் செய்வதுதான் வழக்கம். ஆனால் அவர் தன்னுடைய காதலால் இனியாவை அடிக்கப் போவது இந்த வார ப்ரமோவில் பெரிய ட்விஸ்டாக உள்ளது.

குட்டு வெளிப்படுமா?

குட்டு வெளிப்படுமா?

தொடர்ந்து குடும்பத்தினரிடையே கோபியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்பிவரும் நிலையில், அவர் இவ்வாறு நடந்துக் கொள்வது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது. அவர் வரும் வாரங்களில் என்ன மாதிரியான முடிவை எடுப்பார், அல்லது குடும்பத்தினரிடம் அவரது குட்டு வெளிப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Recommended Video

Sembaruthi Serial-ஐ தயவு செய்து முடிங்க ... ரசிகர்கள் வேண்டுகோள் #TV | Filmibeat Tamil
ராதிகா கோபம் -கோபி அதிர்ச்சி

ராதிகா கோபம் -கோபி அதிர்ச்சி

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள புதியப் ப்ரமோவில் ராதிகா கோபியின் குடும்பத்தினரை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். கோபி தொடர்ந்து மறுக்கிறார். இதையடுத்து தன்னுடைய வீட்டிலிருந்து வெளியில் செல்லுமாறு ராதிகா கூறுகிறார். கோபி அதிர்ச்சியில் உறைகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X