குடிபோதையில் உளறிய கோபி.. உண்மையை தெரிந்துக் கொண்ட ராதிகா.. அடுத்தது என்ன முடிவு எடுப்பார்?
சென்னை : விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது பாக்கியலட்சுமி தொடர்.
தொடர்ந்து விறுவிறுப்பான காட்சிகளுடன் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான எபிசோட்களை தந்து வருகிறது.
Recommended Video
தன்னுடைய காதல், குடும்பம் இரண்டிற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கோபி கேரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

சிறப்பான சீரியல்கள்
விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இணையாக தன்னுடைய சீரியல்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அடுத்தடுத்த தொடர்களை களமிறக்கி வருகிறது. சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள செல்லம்மா தொடர் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தொடர்களின் அடுத்த சீசன்கள்
முன்னதாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களின் அடுத்த சீசன்களையும் ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியல்கள் மற்றும் இதன் காட்சிகளால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து வருகின்றனர். தங்களது வீடுகளில் இருக்கும் மற்றும் இல்லாத விஷயங்களை தொடர்களில் பார்ப்பது அவர்களது நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்து விடுகிறது.

ஆட்டம் கண்ட பாரதி கண்ணம்மா
இந்தத் தொடர்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாரதி கண்ணம்மா தொடர், அந்தத் தொடரிலிருந்து ரோஷினி விலகியதில் இருந்தே ஆட்டம் காண ஆரம்பித்தது. தற்போது அந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கிலிருந்து கீழிறங்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை சந்தித்துவரும் பாக்கியலட்சுமி டிஆர்பியில் சேனலின் முன்னணி தொடராக மாறியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் ப்ரமோ
தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இந்த தொடரின் ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ராதிகாவின் தொடர் வற்புறுத்தலால் புலம்பலில் இறங்கிய கோபி, குடித்துவிட்டு மீண்டும் ராதிகா வீட்டிற்கு வருகிறார்.

உண்மையை தெரிந்துகொள்ளும் ராதிகா
அங்கு வந்து என்னுடைய குடும்பத்தை தானே பார்க்க வேண்டும் என்று குடிபோதையில் தன்னுடைய மொபைல் போனில் தானும் பாக்கியலட்சுமியும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டுகிறார். இதனால் ராதிகா அதிர்ச்சியடைகிறார். பேச முடியாமல் செய்வதறியாது அதிர்ச்சியில் கீழே உட்காருகிறார்.

ராதிகா வற்புறுத்தல்
இந்தத் தொடரில் தன்னுடைய கணவனை பிரிந்து வாழும் ராதிகா, கோபியை திருமணம் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டிய நிலையில், அவர்குறித்து சங்கமத்தின்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் மற்றும் மூர்த்தி அவருக்கு உண்மையை கூறுகின்றனர். இதையடுத்தே தற்போது அவரது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று ராதிகா வற்புறுத்தினார்.

என்ன முடிவு எடுப்பார்?
இந்நிலையில் உண்மை அவருக்கு தெரியவந்துள்ள நிலையில், அவர் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்பது வரும் வாரங்களில் தெரியவரும். அல்லது இதையும் கனவு என்று சொல்லிவிட்டு டைரக்டர் கடந்து போவாரா என்பது குறித்தும் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











