பக்கவாதத்தால் பேச்சிழக்கும் கோபியின் அப்பா... பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

சென்னை : விஜய் டிவியின் பரபரப்பான சீரியலாக பாக்கிலட்சுமி தொடர் காணப்படுகிறது.

இந்த தொடரின் அடுத்தடுத்த ட்விஸ்ட்களால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சீரியலின் பிரமோ எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் போலவே சீரியல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய தொடராக பாக்கியலட்சுமி காணப்படுகிறது. இந்த தொடரில் கோபி கேரக்டரின் கல்லூரி காதல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அடுத்தடுத்த பிரமோ

அடுத்தடுத்த பிரமோ

தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவுடன் கோபிக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு கோபியின் அப்பா மற்றும் எழில் இருவருக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மயூ மூலம் பாக்யா, இனியா, கோபியின் அம்மா, ஜெனி உள்ளிட்டவர்களுக்கும் தெரிய வந்ததாக பிரமோ வெளியானது.

தினந்தோறும் இரவில் தொடர்

தினந்தோறும் இரவில் தொடர்

இதையொட்டி தொடர் பரபரப்புக்கு உள்ளானது. மயூ தன்னுடைய அம்மா கோபியை கல்யாணம் செய்து கொள்வதாக கூற, பதிலுக்கு இனியா, இது என்னுடைய அப்பா என்று கூற, அனைவருக்கும் உண்மை தெரிய வருவதாகவும் பிரமோ வெளியிட்டது விஜய் டிவி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு இந்த தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.

உண்மையை கூறவரும் கோபி அப்பா

உண்மையை கூறவரும் கோபி அப்பா

இதையடுத்து கோபியின் அம்மாவிற்கு நெஞ்சு வலி ஏற்படுவதாகவும் அந்த பிரமோவில் காணப்பட்டது. இதையடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பிரமோவில், கோபியின் அப்பா, இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தான் குடும்பத்தினர் அனைவரிடமும் உண்மையை கூறவுள்ளதாக கோபியிடம் கூறுகிறார்.

பேசும் திறனை இழக்கும் கோபி அப்பா

பேசும் திறனை இழக்கும் கோபி அப்பா

தொடர்ந்து மாடிப் படிகளில் இருந்து வேகமாக இறங்கும் அவர் கால் தடுக்கி விழுகிறார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து பக்கவாதம் ஏற்படுவதாகவும் அதனால் அவர் பேசும் திறமையை இழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தினர் மன வருத்தம்

குடும்பத்தினர் மன வருத்தம்

இதனால் கோபி உள்ளிட்ட குடும்பத்தினர் மிகுந்த மன வருத்தம் அடைகின்றனர். அவர்கள் உடைந்து விடுகின்றனர். ஆயினும் கோபி -ராதிகாவின் விஷயத்தை குடும்பத்தினரிடையே கூற முற்படும் அவரது முயற்சி இந்த விபத்தால் தவிர்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்

அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்

எழிலுக்கு திருமணம் முடிந்தவுடன் ராதிகாவை தான் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக முன்னதாக கோபி தன்னுடைய தந்தையிடம் கூறுகிறார். இதையடுத்தே அவர் மற்றவர்களிடம் அவரது காதல் விவகாரத்தை கூறும் முடிவை எடுக்கிறார். ஆனால் அவர் தற்போது பேச்சிழந்துள்ளது தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X