பாக்கியலட்சுமிக்கு தெரிந்த உண்மை..பரபரப்பான கட்டத்தில் தொடர்..இதைத்தானே ரசிகர்கள் எதிர்பார்த்தாங்க

சென்னை : விஜய் டிவியின் பரபரப்பான தொடரான பாக்கியலட்சுமி தற்போது சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

குடும்பம், காதல் என இரட்டை சவாரி செய்துவந்த கோபி தன்னுடைய குடும்பத்தினரிடம் மாட்டுவாரா என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராதிகாவிற்கு கோபியின் தகிடுதத்தம் தெரியவந்தது. அவர் கோபியை முற்றிலும் வெறுத்தார்.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தொடர்களும் ரசிகர்களுக்கு எப்போதுமே சிறப்பான அனுபவத்தை கொடுத்து வருகின்றன. இந்த சேனலின் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்து வருகின்றன. தொடர்ந்து வித்தியாசமான நிகழ்ச்சிகளை விஜய் டிவி கொடுத்து வருகிறது.

சிறப்பான தொடர்கள்

சிறப்பான தொடர்கள்

இந்நிலையில் தொடர்களிலும் சிறப்பான கவனத்தை கொடுத்து வருகிறது விஜய் டிவி. இந்த சேனலின் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் மட்டுமின்றி, சில தொடர்களின் அடுத்த சீசன்களும் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர்களும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றன.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

இந்நிலையில் விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் திருமணமான மகனுக்கு தந்தையாக வரும் கோபி என்ற கேரக்டர் காதலில் விழுவதாக கதைக்களம் சென்று வருகிறது. இதனால் தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்யும் நடவடிக்கையிலும் அவர் இறங்கினார்.

கோபியின் டைவர்ஸ் முடிவு

கோபியின் டைவர்ஸ் முடிவு

அப்பாவியான பாக்கியா, தன்னுடைய கணவரின் இந்த நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாமல் அவர் நீட்டிய பேப்பர்களில் கையெழுத்திட்ட சம்பவங்களும் நடந்தன. ஆனால் அது எதுவும் வெற்றியடையவில்லை. இந்நிலையில் கோபியின் இந்த நடவடிக்கை காதலி ராதிகாவிற்கு தெரியவர அவர், கோபியை வெறுப்பதாக தெரிவித்து மும்பை செல்ல திட்டமிட்டார்.

கோபிக்கு விபத்து

கோபிக்கு விபத்து

ராதிகாவின் கணவர், பாக்கியலட்சுமியின் குடும்பத்தினரிடம் கோபியின் இந்த செயல்பாடு குறித்து போட்டுடைக்க இதனால் அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். ஆனாலும் பாக்கியலட்சுமிக்கு இதுகுறித்து எதுவும் தெரியாத நிலையில், கோபிக்கு ஆக்சிடெண்ட் நடக்கிறது. விஷயம் குறித்து யூகிக்கும் அவர் குழப்பத்தில் மரத்தின்மீது மோதி விபத்தை சந்திக்கிறார்.

அதிர்ச்சியில் பாக்கியா

அதிர்ச்சியில் பாக்கியா

கோபியின் இந்த விபத்து குறித்து அறிந்துக் கொள்ளும் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது மனைவியிடம் நர்ஸ் கையெழுத்து வாங்க வருகிறார். அதில் ராதிகா கையெழுத்திடுகிறார். இதைப்பார்க்கும் பாக்கியலட்சுமி அதிர்ச்சி அடைகிறார். தொடர்ந்து நினைவு திரும்பும் கோபியிடம் ராதிகா பேசுகிறார்.

பாக்கியாவிற்கு தெரியவந்த உண்மை

பாக்கியாவிற்கு தெரியவந்த உண்மை

அப்போது அவர் ராதிகா இல்லையென்றால் தான் இறந்து விடுவேன் என்று உருக்கமாக கூறுகிறார். இதை பார்க்கும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய ப்ரமோவில் காணப்படுகிறது. தற்போது ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி இருவருக்கும் கோபியின் விஷயம் தெரிய வந்துள்ள நிலையில் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Sathyaraj | சின்னத்திரை Serial-லில் Sathyaraj-ஐ பார்க்க ரசிகர்கள் ஆர்வம்! *TV | Filmibeat Tamil
கோபி வீடியோ

கோபி வீடியோ

முன்னதாக கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அடுத்த 3 வாரங்களுக்கு இந்த விபத்தையொட்டிய எபிசோட்கள் ரசிகர்களை கட்டிப்போடும் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த கேரக்டர் ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ள நிலையில், அவரை திட்டி அதிகமான கமெண்ட்ஸ் வருவதாக அவர் முன்னதாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X