Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே!

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கருப்பு கண்ணம்மாவை காதலிச்சு, கல்யாணமும் செய்துக்கறான் பாரதி.

பாரதியின் அம்மா கருப்பு பிடிக்காதவங்க.ஆனால், மகன் பாரதி மேல ரொம்பவும் பாசம். . கல்யாணத்தை ஏத்துக்காம உறவுக்காரங்க தொல்லையால் வீட்டில் அனுமதிக்கறாங்க.

எவ்வளவோ பெரிய வீட்டில் எங்கியோ ஒரு மூலையில் என்ன நடக்குதுன்னு தெரியாமலே போயிரும். அப்படி ஒரு ஓரத்தில் அவ இருந்துட்டு போகட்டும்னு விட்டுட்டேன்னு சொல்றாங்க பாரதியின் அம்மா.

 பிறக்காதேன்னு சொல்லிக்கறான்.

பிறக்காதேன்னு சொல்லிக்கறான்.

பாரதிக்கு முதலிரவு நடக்க இருக்குது. அப்போ அம்மா பாரதி, கண்ணம்மா ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் செய்ய மறுக்கறாங்க. அவ இந்த வீட்டின் ஒரு வேலைக்காரியா இருந்துட்டு போகட்டும்..இன்னிக்கு உனக்கு முதல் ராத்திரி.இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறே... அவளை மாதிரி கருப்பா புள்ளைங்களை பெத்து போடுன்னு சொல்றாங்க. ஆனா, பாரதி மனசுக்குள்ள அந்த கவலை உங்களுக்கு வேணாம்மா ..எனக்குத்தான் குழந்தையே பிறக்காதேன்னு சொல்லிக்கறான்.

முதலிரவா கூடாது

முதலிரவா கூடாது

எனக்கு பாரதி மாமாவோட நடக்க வேண்டிய முதலிரவு கண்ணம்மாவோட நடக்க போகுதா... இது கூடவே கூடாது.என்னைத் தவிர பாரதி மாமா யாரையும் தொட கூடாதுன்னு கத்திக்கிட்டு இருக்கா அஞ்சலி. இவதான் அகிலனுக்கு நிச்சயமானப்பவே பாரதியை காதலிச்சவளாச்சே. சொல்லப் போனால் இவள் டார்ச்சர் தாங்காமல்தான் பாரதி கண்ணம்மாவை வெகு சீக்கிரம் கல்யாணம் செய்துகிட்டு அஞ்சலி முன் மாலையும் கழுத்துமாக நின்றவன்.

செய்ய நினைக்கறாங்க

செய்ய நினைக்கறாங்க

சவுந்தர்யா அம்மாவின் தோழிகள் வேணும்னே சவுந்தர்யா அம்மாவை கிண்டல் செய்யறாங்க. இந்த காலத்து பசங்க புதுமை செய்யத்தான் நினைக்கறாங்க.. ஐடி பசங்க விவசாயம் செய்ய ஆசைப்படறாங்க. வெள்ளையா இருக்க பசங்க கருப்பு பொண்ணை கல்யாணம் செய்து காமிக்கறேன்னு சவால் விடறாங்க...

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஆனா,பாரு சவுந்தர்யா உன் பையன் பாரதி பேருக்கு ஏத்த மாதிரி புதுமை செய்து இருக்கான்.அதோட பேர் பொருத்தம் வேற பாரு பாரதி கண்ணம்மா இதெல்லாம் அமையுமான்னு கிண்டல் பண்ண,சவுந்தர்யா அம்மா கோவத்தில் வந்துடறாங்க. நம்ம அழகு சாதனா பொருட்கள் தயாரிக்கும், விற்பனை செய்யும் கம்பெனி நடத்திட்டு இருக்கோம். நம்மால ஒரு பெண் வாழக்கை இல்லாமல் இருந்தால் என் பிசினெஸ் பாதிக்கும்னு வீட்டுக்குள்ள அவளை விட்டு இருக்கேன்னு சவுந்தர்யா அம்மா சொல்ல, எல்லாம் உங்களுக்கு பிசினெஸ் தானம்மான்னு பாரதி வருத்தமா கேட்கறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X