Barathi Kannamma Serial: ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வர்ணம் பூசுகிறாய்!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தனது பெண்ணை கருப்பாக பெற்றுவிட்டு, மனைவியும் இறந்துவிட்ட நிலையில், அந்த பெண் படும் துயரங்களை கண்டு ரத்த கண்ணீர் விடாத குறையாக கண்ணீர் விடும் ஒரு அப்பாவின் கதையும் இதில் இருக்கிறது.
கண்ணம்மா கருப்பாக இருப்பதால் தன்னை அப்பாவைத் தவிர அப்பாவின் இரண்டாவது சம்சாரம், அவருக்கு பிறந்த தங்கை அஞ்சலி, சித்தியின் அம்மா இவர்களிடம் அவள் வேலைக்காரியாகி கொடுமையும் அனுபவிக்கிறாள்.
கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி மிஸ் சென்னையாம், அவளை சவுந்தர்யா அம்மாவின் இளைய மகன் ஆசைப்பட, அழகாக இருக்கிறாள் என்று சவுந்தர்யா அம்மாவும் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை என்று இளைய மகன் அகிலனுக்கு பேசி முடிக்கிறார்கள்.

பிடிக்காது கருப்பு
சவுந்தர்யா அம்மாவுக்கு கருப்பு என்றால் பிடிக்காது.எப்போதும் அழகாக இருப்பவர்களை மட்டும்தான் பிடிக்கும்., கருப்பு என்பதால் தனது பேத்தியையே கூட தொட மாட்டார்கள். இதனால், இவங்க பெத்த பொண்ணு கோச்சுக்கிட்டு போயிருச்சு. இந்த நிலையில்தான் பெண்ணைப் பார்க்க வந்த அகிலனை பிடிக்காமல், அவனின் அண்ணன் பாரதியை அஞ்சலிக்கு பிடித்து அவன் மேல் காதல் வந்துருது. தம்பி ஆசைப்பட்ட, தம்பிக்கு பார்த்த பெண்ணை எந்த அண்ணன் விரும்புவான். இதனால், பாரதிக்கு அஞ்சலி பேசினாலே வெறுப்பாகிவிடுகிறது.

பாரதிக்கு காதல்
பாரதிக்கு கருப்பு கண்ணம்மா மீது அளவற்ற காதல் வந்துருது. இது பார்க்க நன்றாக இருக்கிறது. அஞ்சலிக்கு கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க போனபோது ஒரு புடவையை பார்த்து கண்ணம்மா ஆசைப்பட, அது விலை அதிகம் என்று சொல்லி கண்ணம்மாவின் அப்பாவும் வச்சுட்டு வந்துடறார். இதை கவனித்த பாரதி, அந்த புடவையை எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறான். கண்ணம்மாவின் மீது காதல் கொண்டு, அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்துகொண்டு வீட்டுக்கு வந்த உடன், அஞ்சலி கல்யாணம் பேசி முடிக்க வருகையில்,அந்த புடவையை கண்ணம்மாவிடம் கொடுத்து அவளை மகிழ்விக்கிறான் பாரதி.

ஆசைப்பட்டு அப்பாவிடம்
ஆசைப்பட்டு அப்பாவிடம் கேட்ட இந்த புடவையை புருஷன் பாரதி மாமா வாங்கி பத்திரமாக வைத்திருந்து தன்னிடம் கொடுத்ததை எண்ணி மகிழும் கண்ணம்மா அப்பாவிடம் காண்பிக்க வேண்டும் என்று விருப்பப் பட்டு,அப்பாவை பார்த்துட்டு வந்துடறேன் பாரதி மாமான்னு கேட்கறா. போயிட்டு வா கண்ணம்மான்னு அனுப்பி வைக்கிறதான் பாரதி. கண்ணம்மா புருஷன் வாங்கிக் கொடுத்த புடவையோடு அப்பாவைப் பார்க்க வருகிறாள்.

நல்லாருக்கா அப்பா
அப்பா மகளை ஆசையோடு வரவேற்று, பார்த்துட்டு பூரித்து போகிறார். அப்பா இந்த புடவை ஞாபகம் இருக்கா .அன்னிக்கு ஜவுளிக் கடையில் இந்த புடவையைப் பார்த்துட்டு விலை அதிகமா இருக்குன்னு சொல்லிட்டு வாங்காம வந்திட்டோம்ல அதை பாரதி மாமா பார்த்துட்டு வாங்கி பத்திரமா வச்சிருந்து எனக்கு இப்போ குடுத்தார் அப்பா. உண்மையாவே பாரதி மாமா என்னை அப்போலேர்ந்து விரும்பினதா சொல்றாருப்பான்னு சொல்லிட்டு கண்ணம்மா சந்தோஷமா சிரிக்கறா.

கால் போட்டு
நான் சொன்னேன் நீதான் நம்பலை கண்ணம்மா .மாப்பிள்ளைக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்மா. எனக்கு அப்பறம் உன்னை யார் பார்த்துக்குவான்னு கவலையில் இருந்தேன். இப்போ நிம்மதியா இருக்கும்மா. சம்பந்தி அம்மா மாதிரி கால் மேல் கால் போட்டு உட்காரு கண்ணம்மான்னு அப்பா ஆசையா கேட்கிறார். கண்ணம்மா அப்பாவின் ஆசைப்படி சோஃபாவில் உட்கார இவர் கீழே உட்கார்ந்து மகளின் அழகை ரசிக்கிறார் அப்பா, போட்டோ எடுக்கறார். செல்ஃபி எடுத்துக்கறாங்க. அப்பாவும் பெண்ணும் இப்படி இருப்பதும், இதை இயக்குநர் ஸ்பெஷல் காட்சியாக வைத்து மெருகேற்றி காண்பித்து இருப்பதும் நன்றாக இருக்கிறது.
பாரதி கண்ணம்மாவின் இந்த காட்சி எல்லா அப்பா, மகள்களுக்கும் சமர்ப்பணம்!


Click it and Unblock the Notifications











