ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ப்ளாக் ப்யூட்டி... சீரியலில் அடக்க ஒடுக்கமாக இருந்த ரோஷிணியா இது?
சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் ரோஷிணி.
தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம். அதனால்தான் அவர் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முன்னணி தொடராக விளங்குகிறது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு இடையிலான புரிதலின்மை மற்றும் அதன் காரணமாக சீரியலில் நடைபெறும் நிகழ்வுகள், வில்லியின் அடுத்தடுத்த திட்டங்கள் என பரபரப்பாகவே சென்றது பாரதி கண்ணம்மா.

குவியும் படவாய்ப்புகள்
இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் சிறப்பாக நடித்துவந்தார் ரோஷிணி ஹரிப்பிரியன். இவருக்கு இந்த தொடர் மூலமாக ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். மேலும் இந்த தொடர் மூலமாக இவருக்கு படவாய்ப்புகள் குவிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறைந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் ரோஷிணி. இதையடுத்து இந்த தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். இதன்மூலம் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இயல்பான நடிப்பால் கவர்ந்த ரோஷிணி
இவர் விலகியதையடுத்து கண்ணம்மா என்றாலே ரோஷிணிதான் நினைவுக்கு வருவதாகவும் அவர் இல்லாத தொடரை பார்க்க விருப்பமில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்னுடைய இயல்பான நடிப்பு மூலம் கவர்ந்திருந்தார் ரோஷிணி.

சமூக வலைதளங்களில் பிசி
சமூக வலைதளங்களிலும் ரோஷிணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபல பாடலுக்கு நீச்சல் குளத்தின் அருகில் அவர் போட்டுள்ள ஆட்டம் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

சூப்பர் நடனம்
ரசிகர்களை கவர்ந்துள்ள கச்சா பாதம் பாடலுக்கு அவர் சூப்பராக நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மாடர்ன் உடையில் அவர் ஆடியுள்ள இந்த நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பலரும் சிறப்பான விமர்சனங்களை இந்த நடனத்திற்கு அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











