பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு வளைகாப்பு...பாரதியுடன் சென்று வாழ்த்திய கண்ணம்மா
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிக பிரபலமானது பாரதி கண்ணம்மா. டிஆர்பி.,யிலும் முதலிடம் பிடித்துள்ள சீரியலும் இது தான். அடுத்தடுத்து பல ட்விஸ்ட்கள், விறுவிறுப்புகளுடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா.
Recommended Video
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பாரதி, கண்ணம்மா. அவர்களை சதி செய்து பிரிக்கும், பாரதியை ஒருதலையாக காதலிக்கும் வெண்பா. கண்ணம்மாவிற்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்றை பிரித்து எடுத்துச் செல்லும் மாமியார் செளந்தர்யா. பாரதி - கண்ணம்மாவை சேர்த்து வைக்க முயற்சிக்கும் பாரதியின் குடும்பம், விடாமல் சதி வேலைகள் செய்து அவர்களை பிரித்து, பாரதியை திருமணம் செய்ய துடிக்கும் வெண்பா என விறுவிறுப்பாக செல்கிறது இந்த சீரியல்.
தற்போது அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடப்பதாக காட்டப்பட்டு வருகிறது. வளைகாப்பில் வெண்பா திருமணம் ஆகாதவர் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார் அஞ்சலி. அதே சமயம் தனக்கு பிறந்தது இரட்டை குழந்தையா என்ற உண்மையை தெரிந்து கொள்ள மாமியார் செளந்தர்யாவை துரத்தும் கண்ணம்மா, அவளிடம் இருந்து ஓடி ஒளியும் செளந்தர்யா ஆகிய காட்சிகள் காட்டப்படுகிறது.

கர்ப்பத்தை அறிவித்த வெண்பா
இந்த சீரியலில் வில்லி வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரீனா ஆசாத். ஃபரீனா நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் இனி பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர மாட்டார். வெண்பாவின் கேரக்டர் மாற்றப்படுமா அல்லது கதையே வேறு விதமாக மாற்றப்படுமா என்பது போன்ற பல சந்தேகங்களை நெட்டிசன்கள் கிளப்பினர்.

நான் தான் நடிப்பேன்
இதற்கு பதிலளித்த ஃபரீனா, வெண்பா கேரக்டரில் தானே தொடர போவதாகவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் பிரேக் எடுத்துக் கொண்டு பிறகு மீண்டும் நடிக்க வந்து விடுவதாக தெரிவித்தார்.

கலக்கல் ஃபோட்டோஸ்
இதைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில், கர்ப்ப காலத்தை கொண்டாடும் விதமாக விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இவரது ஃபோட்டோஷுட்கள் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றன.

நிஜத்திலும் வளைகாப்பு
தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் மட்டுமல்ல, நிஜத்திலும் வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. அது நம்ம வெண்பா ஃபரீனாவுக்கு தான். இந்த ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகின. ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் ஃபரீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கண்ணாம்மாவே வாழ்த்தினார்
இந்த வளைகாப்பு விழாவிற்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் பலரும் நேரில் சென்று ஃபரீனாவை வாழ்த்தி உள்ளனர். அதிலும் பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத், கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன், ஆரம்பத்தில் அகிலன் கேரக்டரில் நடித்த அகிலன் உள்ளிட்டோர் பரிசு கொடுத்து ஃபரீனாவை வாழ்த்தியதுடன், அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

வெண்பாவை கட்டிப்பிடித்த பாரதி
ஃபரீனாவை கட்டிப்பிடித்து வாழ்த்தும் பாரதி, சந்தனம் பூசி வாழ்த்தும் கண்ணம்மா, வாழ்த்து பாடல் பாடும் பாரதி - கண்ணம்மா போன்ற ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டிங் ஆகி உள்ளன.


Click it and Unblock the Notifications











