ஆமா நான் தான்...பாரதியிடம் உண்மையை போட்டுடைக்கும் கண்ணம்மா...விறுவிறுப்பாக வெளியான ப்ரோமோ

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மட்டுமல்ல, தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே டிஆர்பி.,யில் முதலிடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். வழக்கம் போல் கடந்த வார டிஆர்பி., ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது.

மலையாளம், கன்னடம், தெலுங்கு என எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனாலும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கத் தான் செய்கிறது. அதனாலேயோ என்னவோ இந்த சீரியல் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா இணைவு

பாரதி கண்ணம்மா இணைவு

குழந்தைகள் இருவருமே கண்ணம்மாவிடம் சென்றதும், அவர்களை பார்க்க பாரதி அடிக்கடி அங்கு செல்வதும் என கதை நகர்ந்ததால் அனைவரும் பாரதியும், கண்ணம்மாவும் மீண்டும் இணைய போகிறார்கள். பாரதி மனதில் மீண்டும் கண்ணம்மா மீது காதல் வருகிறது. கண்ணம்மாவை, பாரதி ஏற்றுக் கொள்ள போகிறார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

டெஸ்ட் எடுப்பீங்களா

டெஸ்ட் எடுப்பீங்களா

கொரோனா டெஸ்ட் எடுப்பது போன்ற சீன் காட்டப்பட்ட போதே, அப்படியே அந்த டிஎன்ஏ டெஸ்ட்டையும் எடுத்துடுங்க. அந்த டெஸ்ட்டை எப்போ எடுப்பீங்க. டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீங்களா, மாட்டீங்களா என பலரும் சோஷியல் மீடியாக்களில் கமெண்ட் செய்தனர்.

கோபப்படும் பாரதி

கோபப்படும் பாரதி

ஆனால் ரசிகர்கள் எதிர்பாத்தது போல் ஏதும் நடக்காமல், லட்சுமி, கண்ணம்மாவின் மகள் என்பதை தெரிந்து கொள்ளும் பாரதி, மீண்டும் வெண்பாவின் பேச்சைக் கேட்டு கண்ணம்மா மீது கோபத்தை காட்டுகிறார். இதற்கிடையே அஞ்சலியின் உடல்நிலை குறித்த ரகசியத்தை தெரிந்து கொள்ளும் வெண்பா, அவளை கொல்ல ஸ்லோ பாய்சன் மருந்தை பாரதியின் பெயரை பயன்படுத்தி கொடுக்கிறாள்.

 அஞ்சலிக்கு என்னாகும்

அஞ்சலிக்கு என்னாகும்

இதனால் இனி கதை அஞ்சலியை சுற்றி போகும், அஞ்சலிக்கு என்ன ஆகும், இறந்து விடுவாரா. அடுத்து அஞ்சலியின் வளைகாப்பை வைத்து தான் கதையை ஓட்ட போகிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கையில் புதிய ட்விஸ்டாக, டாக்டரை பார்க்க சென்ற கண்ணம்மாவிற்கு தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்ற உண்மை தெரிய வருகிறது.

இரட்டை குழந்தை பிறந்ததா

இரட்டை குழந்தை பிறந்ததா

உடனடியாக மாமியார் செளந்தர்யாவுக்கு உண்மை தெரிந்திருக்கும் என சந்தேகப்படும் கண்ணம்மா, செளந்தர்யாவிற்கு போன் செய்கிறார். ஆனால் அதிர்ச்சியில் என்ன சொல்வது என தெரியாமல், கண்ணம்மாவின் போனை பாதியிலேயே கட் செய்து விடுகிறார் செளந்தர்யா. இதனால் ஹேமாவை திரும்ப விடும் சாக்கில், செளந்தர்யாவை நேரில் பார்த்து உண்மையை கேட்க செல்கிறாள் கண்ணம்மா.

ஓடி ஒழியும் செளந்தர்யா

ஓடி ஒழியும் செளந்தர்யா

ஆனால் கண்ணம்மா வருவதை கண்ட செளந்தர்யா, ரூமில் சென்று ஒழிந்து கொள்கிறார். ஆனால் செளந்தர்யாவிடம் உண்மையை தெரிந்து கொள்ள அவரை தேடுகிறாள் கண்ணம்மா. இப்படி விறுவிறுப்பாக முடிந்தது கடந்த வார எபிசோட்.

உண்மையை உடைக்கும் கண்ணம்மா

உண்மையை உடைக்கும் கண்ணம்மா

தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் ப்ரோமோவில், லட்சுமியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்கிறாள் கண்ணம்மா. ஆனால் பாரதி, மீண்டும் லட்சுமியின் பெற்றோர் வந்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்கிறார். இதுவரை அமைதியாக இருந்த கண்ணம்மா, திடீரென ஆவேசமாக, ஆமாம்...லட்சுமி என்னுடைய பொண்ணு தான். நான் தான் அவளோட அம்மா. அதற்கென்ன இப்போ என கூறி, லட்சுமி தனது மகள் என்ற உண்மையை உடைக்கிறாள்.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

அதோடு அங்கு சமையலம்மா என கூப்பிட்டபடி வரும் லட்சுமியிடம், இனி என்னை சமையலம்மா என கூப்பிட வேண்டிய அவசியமில்லை. அம்மா என்றே கூப்பிடு என கூறி, லட்சுமியை தன்னோடு கூட்டிக் கொண்டு போகிறாள் கண்ணம்மா. இப்படியாக செம விறுவிறுப்பாக இந்த வார ப்ரோமோ முடிகிறது. இந்த ப்ரோமோ பாரதி கண்ணம்மா சீரியலின் டிஆர்பி.,யை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X