தொடர்ந்து குற்றம்சாட்டிய பாரதி.. திகைத்து நின்ற கண்ணம்மா.. என்னங்க இப்படி பண்ணா எப்படி!

சென்னை : விஜய் டிவியின் பிரபலமான தொடரான பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்தத் தொடரில் கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் முடிவை கைவிட்டு விட்டதாக தன்னுடைய மகளுக்கு பாரதி உறுதியளித்திருந்தார்.

ஆயினும் கதையோட்டத்திற்காகவோ என்னவோ, தொடர்ந்து கண்ணம்மா மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார் பாரதி.

பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா தொடர் காணப்படுகிறது. இந்தத் தொடரில் கணவன் -மனைவிக்கு இடையில் வில்லி புகுந்தால், அவர் தனது சதித்திட்டங்களை தொடர்ந்து அரங்கேற்றினால் என்னவாகும் என்பதை கதைக்களமாக கொண்டு இந்தத் தொடரின் கதையோட்டம் நடந்து வருகிறது.

அரைத்த மாவு

அரைத்த மாவு

இது சரிதான் ஆனால் இதையே எவ்வளவு காலத்திற்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு இந்த டீமிடம் பதில் இல்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், நாங்கள் அரைத்த மாவைத்தான் அரைப்போம் என்று இந்த கதைக்களத்தையே தொடர்ந்து கொடுத்து வருகிறார் இயக்குநர்.

ஒரே மாதிரியான கதைக்களம்

ஒரே மாதிரியான கதைக்களம்

சீரியலின் இடையில் அவருக்கு வேறு கதையை புகுத்த விருப்பமில்லையோ என்னவோ, ஆனால் ரசிகர்கள் இதே கதையோட்டத்தை பார்த்து வெறுத்துவிட்டார்கள். ஒன்று பாரதி, கண்ணம்மாவை வெறுப்பேற்றுவார், திட்டுவார். அல்லது கண்ணம்மா அழுவார். அப்படியே இல்லையென்றாலும் அவர்களது குழந்தைகள் தங்களது தாய் -தந்தை குறித்து பேசுவார்கள்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

இப்படியே போனால் எப்படி, ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே இந்த தொடர் குறித்து சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். இது காதில் கேட்டதோ என்னவோ, தற்போது பாரதியின் மருத்துவமனையில் கண்ணம்மாவை வேலையில் சேர்த்து அதை தனியாக கொடுத்து வருகிறார் இயக்குநர்.

காணாமல் போன ஜானகி -ராமன்

காணாமல் போன ஜானகி -ராமன்

தற்போது இந்த தொடரின் புதிய எபிசோடில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜானகி மற்றும் ராமன் இருவரும் காணாமல் போய்விட, அதற்கு கண்ணம்மாவை குற்றம் சாட்டுகிறார் பாரதி. இதனால் கண்கலங்கி நிற்கிறார் கண்ணம்மா. இதனிடையே தன்னுடைய கணவர் ராமனை தனியாக அழைத்துச் சென்று தன்னுடைய உடம்பின் பிரச்சினை குறித்து தெளிவுப்படுத்துகிறார் ஜானகி.

கண்ணம்மா காரணம் இல்லை

கண்ணம்மா காரணம் இல்லை

அவர்களை காணாமல் மருத்துவமனையே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்க, அங்கே வரும் ஜானகி -ராமன், தாங்கள் வெளியே சென்றதற்கான காரணத்தை விளக்குகின்றனர். கண்ணம்மா இதற்கு காரணம் இல்லை என்றும் கூறுகின்றனர். முன்னதாக கண்ணம்மாவை குற்றவாளியாக்கி வேடிக்கை பார்த்த பாரதி, தற்போது இந்த விவகாரத்தால் கில்டியாக பீல் செய்கிறார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

முன்னதாக தன்னுடைய மகள் ஹேமாவிடம் அவளது அம்மாவை தான் விவாகரத்து செய்ய மாட்டேன் என்று உறுதியளித்திருந்தார் பாரதி. ஆனாலும் கண்ணம்மாவை குற்றவாளியாக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி, காரண காரியங்களை கூட ஆராயாமல் அதை சிறப்பாக செய்து வருகிறார் பாரதி. அவரது இந்த நடவடிக்கைகள் ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பி வருகின்றன.

வழக்கமான கணவன்

வழக்கமான கணவன்

ஜானகி மற்றும் ராமன் காணாமல் போனதற்கு கண்ணம்மா தான் காரணம் என்று கூறுவதற்கு முன்னதாக, அது அப்படி நடந்திருக்குமா என்பது குறித்து மருத்துவராக ஆராயாமல், ஒரு கணவனாக வழக்கம்போல தனது மனைவியை குற்றவாளியாக்கும் பாரதியின் செயல்பாடு ரசிகர்களிடையே விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X