கண்ணம்மா முன்பு வெண்பாவை அழவிட்ட பாரதி.. என்ன காரணம் தெரியுமா!
சென்னை : விஜய் டிவியின் சிறப்பான தொடராக பாரதி கண்ணம்மா தொடர் காணப்படுகிறது.
இந்தத் தொடரில் பாரதி, கண்ணம்மா, வெண்பா, சவுந்தர்யா கேரக்டர்களை வைத்து இயக்குநர் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார்.
தற்போது கதையில் புதிய ட்விஸ்டாக வெண்பாவை அனைவரது முன்னிலையிலும் பாரதி அழ வைத்துள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா காணப்படுகிறது. தொடர்ந்து விஜய் டிவியின் முதல் இடத்தை தக்க வைத்திருந்த இந்தத் தொடர் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியின் விலகல், பாரதி மற்றும் கண்ணம்மா இடையிலான பிரச்சினையை மட்டுமே பேசியது என்பது உள்ளிட்ட பல விஷயங்களில் சறுக்கியது.

முதலிடத்தில் பாக்கியலட்சுமி
இதையடுத்து விஜய் டிவியின் முதல் இடத்தை பாக்கியலட்சுமி தொடர் பச்சக் என்று பற்றிக் கொண்டது. இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்து ட்விஸ்ட்களை இயக்குநர் கொடுத்து வருகிறார். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே மருத்துவமனையில் தற்போது வேலை செய்து வருகின்றனர்.

வெண்பாவிற்கு திருமண ஏற்பாடு
இதேபோல பாரதிக்கு கண்ணம்மா மருத்துவமனையில் முக்கியமான நேரத்தில் உதவுவது, லஷ்மிக்கு தன்னுடைய தந்தை யார் என்ற உண்மை தெரிவது, தற்போது வெண்பாவிற்கு அவரது அம்மா திருமணம் செய்ய முயற்சித்து வருகிறார். இதையொட்டிய காட்சிகள் தற்போது காமெடி கலந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

திருமண அறிவிப்பு
இந்தக் காட்சிகளும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், வெண்பாவிற்கு ரோகித்தை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கும் அவரது அம்மா, பார்ட்டி ஒன்றில் இதை அறிவிக்கிறார். அப்போது அதை மறுக்கும் வெண்பா, தான் பாரதியை தான் திருமணம் செய்வேன் என்று அழுகையுடன் எல்லோரிடமும் கூறுகிறார்.

வெண்பாவை அழவிட்ட பாரதி
இதையடுத்து பாரதி தான் வெண்பாவை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்றும் அவர் தனக்கு வேண்டாம் என்றும் கூறுகிறார். இதை கேட்டு கண்ணம்மாவின் முகம் பிரகாசமாகிறது. ஆனால் இதை ஏற்க முடியாத வெண்பா உடைகிறார். இதையடுத்து அவர் என்ன முடிவெடுப்பார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய ப்ரமோ வெளியீடு
தற்போது இந்த காட்சிகளின் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பரபரப்பான இந்தக் காட்சிகளை இனிவரும் நாட்களில் ரசிகர்கள் அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்க முடியும். வெண்பாவை வேண்டாம் என்று கூறும் பாரதி, கண்ணம்மாவுடன் இணைவாரா என்பது குறித்தும் தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











