Kanmani: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை தாயானார்.. என்ன குழந்தைனு தெரியுமா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, ஜீ டிவியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலக்ஷ்மியும் போன்ற சீரியல்களில் நடித்தவர் நடிகை கண்மணி மனோகரன். இவர் கடந்த ஆண்டு சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை, கண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்கிற ரோலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை கண்மணி மனோகரன், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பின் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மாறினார். அந்த தொலைக்காட்சியில், ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சீரியலில் பிஸியாக நடித்து வந்த கண்மணி அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் தனது காதலனை அறிமுகப்படுத்தினார். அதன் பின், கடந்த ஆண்டு ஜூன் மாதம் காதும் காதும் வைத்தது போல நிச்சயதார்த்தம் நடந்தது.

Kanmani manoharan Aswanth baby
Photo Credit:

காதல் திருமணம்: இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். கண்மணியின் கணவர் அஷ்வத் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில், வணக்கம் தமிழா போன்ற சில ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இருவரும் நீண்ட நாள் காதலித்து வந்த நிலையில் காதலை பெற்றோரிடம் சொல்லி, இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண செய்து கொண்டனர்.

அழகான குழந்தை: இதைத்தொடர்ந்து, கண்மணி மனோகரன் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு அறிவித்து இருந்தார்.பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில், கண்மணி மனோகரனுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியான தகவலை கண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை கண்மணி, கர்ப்பமாக இருக்கும் போது, தேவயானி நடித்த நிழற்குடை திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் தேவயானி, விஜித், கண்மணி, வடிவுக்கரசி, நீலிமா என பலர் நடித்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X