Vinusha Devi: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இது? அழகு அள்ளுதே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்த வந்த ரோஷினி ஹரிப்பிரியன் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வினுஷா தேவியை சீரியல் என்ட்ரி கொடுத்தார். தற்போது சீரியல் சினிமா என பிஸியாக இருக்கும் வினுஷா தேவி மார்டன் லுக்கில் இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளத்து உள்ளனர்.
பாரதி கண்ணம்மா நடித்து வந்த வினுஷா தேவி, அளித்த பேட்டியில், நான் கருப்பாக, உயரமாக இருப்பதால் நிறைய பேர் கேலி கிண்டல் செய்தனர். சீரியலில் நடிக்க வந்தபோது கூட பலர் என்னை கிண்டலடித்தனர். ஆனால், அனைவரும் என்னை கண்ணம்மாவாக என்னை ஏற்றுக்கொண்டனர் என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள் என கூறியிருந்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு பெயர் எடுத்தார்.

நடிகை வினுஷா தேவி: அதன்பின் வினுஷா தேவி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான வேடுவன் என்கிற வெப் தொடரில் சஞ்சீவின் மனைவியாக நடித்திருந்தார். பவன் குமார் இயக்கத்தில் உருவானி இந்த வெப் தொடரில் கண்ணா ரவி,சஞ்சீவ், ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் சுவாரசியமான இந்த தொடரைத் தொடர்ந்து வினுஷா தேவி தற்போது விஜய்டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சுட்டுவிழி சுடரே என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஒருவர் செய்த துரோகத்தில் பல ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலில் தற்போது இல்லத்தரசிகளிடம் டிரெண்டாகி வருகிறது.

உச்சு கொட்டும் அழகு: சீரியலில் பிஸியாக நடித்து வரும் வினுஷா தேவி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அழகை அள்ளும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா நடிகையாக இது என சொல்லும் அளவிற்கு மிகவும் ஸ்டைலாக அட்டகாசமாக உள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இது? என கேட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் வினுஷா தேவியை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











