வாவ்.. பாரதி கண்ணம்மா "வெண்பா"வுக்கு பாப்பா பொறக்கப் போகுது.. குவியும் வாழ்த்துகள்!
சென்னை : தாய்மையின் பூரிப்பில் செக்கச்சிவந்த வயிற்றை தொட்டு தழுவி நல்ல செய்தியைச் சொல்லியுள்ளார் பாரதி கண்ணம்மா பரீனா ஆசாத்.
Recommended Video
நான் கர்ப்பமாக இருக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் பாப்பா பொறக்கப் போகுதுன்னு ரொம்ப பூரிப்பாக செய்தி வெளியிட்டுள்ளார் பரீனா.
இது எனது நான்கு வருட கனவு என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பரீனாவை வாழ்த்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகின்றனர்.

தாய்மையின் பூரிப்பு
குழந்தை பாக்கியம் என்பது பலருக்கும் பெரிய பொக்கிஷம் தான் .அது தற்போது பரீனாவிற்கு கிடைத்திருப்பதை அறிந்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .ஆனால் இவ்வளவு நாளா எப்படிமா வெளியே தெரியாமல் வச்சுக்கிட்டு இருந்தீங்க. இது மூடி மறைக்கிற விஷயமா ஆனாலும் நீங்க வேற லெவல் தான் என ரசிகர்கள் செல்ல கோபபட்டும் வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா வெண்பா
விஜய் டிவியில் பெரும் பரபரப்பாகவும் ட்டெரிண்டிங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் அனைவருக்கும் தெரியும். இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் பரீனா. கதாநாயகியை போலவே எதிர் நாயகியாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு வலம்வரும் பரீனாவை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.

சூப்பர் பிரபலம்
இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு இவரும் ஒரு காரணம் .தன்னுடைய வில்லத்தனத்தை அந்த முட்டை கண்ணாலேயே காட்டி பலருடைய திட்டல்களையும் வாங்கிக்கொண்டு நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் இவர் வேற லெவல் தான். இந்த சீரியலில் முதன் முதலில் பார்த்த ரசிகர்கள் இவர் தான் கதாநாயகி என நினைத்துக் கொண்டிருந்தனர்.

அழகுச் செல்லம்
அந்த அளவிற்கு அழகால் அனைவரையும் வசீகரித்து இருந்தார் .அதற்குப் பிறகு இவர்தான் வில்லி என்பதையே பலர் புரிந்து கொண்டதும் ஷாக்காகி இருக்கின்றனர் .இவரை இந்த சீரியலுக்கு முன்பே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக பலருக்கும் தெரியும். இவர் தொகுப்பாளராக இருக்கும்போதே இவருக்கென்று பல ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

விமர்சனங்களே படிக்கட்டு
ரசிகர்கள் என்ன தான் இவரை கழுவி கழுவி ஊத்தி வந்தாலும் இவர் தன்னுடைய நடிப்பிற்கு கிடைத்த பாராட்டாகத்தான் நினைத்துக் அதையெல்லாம் தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கிறார் . அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் விஜய் டிவியில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார் .

புன்னகை அரசி
இவருடைய துருதுருன்னு கேரக்டர் அனைவருக்கும் பிடித்துவிடும் கூட நடிப்பவர்கள் இவர் இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக மாறிவிடும் என்று கூறியிருக்கின்றனர். சீரியலை தாண்டி இவருக்கு சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர் . இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 765 கே பாலோவர்ஸ் இருக்கின்றனர். இவர் நடிகை ,தொகுப்பாளர் மட்டுமல்லாமல் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

மாடலிங்கிலும் கலக்கல்
அதனால் அடிக்கடி தான் எடுக்கும் மாடலிங் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார் .இந்த நிலையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் புது மாதிரியாக ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் ஸ்வீட் ஷாக் அடைந்திருக்கின்றனர். இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இவர் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறுவார் என்று நினைத்திருந்த வேளையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை சொல்லியிருக்கிறார் .

நல்ல செய்தி
இதைக்கேட்டதும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நேத்து வரைக்கும் சீரியல்ல பார்க்கும் போது இவ்வளவு பெரிய வயிறு இல்லையே ஆனால் எப்படி இன்னைக்கு இவ்ளோ பெருசா ஆச்சுன்னு தான் பலருக்கு சந்தேகம் வருகிறதாம். ஆனால் எப்போதுமே இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகளை போடும் நெட்டிசன்கள் கூட தற்போது இவருடைய போட்டோவை பார்த்ததும் இவருக்கு வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர் .

குவியும் வாழ்த்துகள்
இவர் தன்னுடைய போட்டோவிற்கு கேப்ஷனாக என் உடல் ஒரு அதிசயத்தை உருவாக்கியுள்ளது. நான்கு வருட கனவு நனவாகியுள்ளது .என்று சந்தோசத்தை பகிர்ந்திருக்கிறார் .அதுமட்டுமல்ல குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்த சீரியலில் நடிக்க வருவேன் என்றும் கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் ரசிகர்கள் அப்போ இந்த சீரியல் முடியாதா என்று கலாய்த்து இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











