கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ துடிக்கும் பாரதி...லேட்டஸ்ட் கலக்கல் ப்ரோமோ

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் ரேட்டிங்குடன் முதலிடத்தில் இருந்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. விறவிறுப்பாக பல ட்விஸ்ட்கள் நிறைந்ததாக போய் கொண்டிருக்கும் சீரியல் இது. மலையாள சீரியலின் ரீமேக்காக இருந்தாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக போய் கொண்டிருக்கும் சீரியல்.

நான்கு வருடங்களை நெருங்கி வரும் இந்த சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் காணப்படுகிறது. கண்ணம்மாவின் வாழ்க்கை ஒரு பக்கம், அஞ்சலியின் உடல்நிலை பற்றிய ரகசியம் ஒரு பக்கம், பாரதிக்கு எப்போது உண்மை தெரியும், வெண்பாவின் சதி திட்டங்கள் எப்போது அம்பலமாகும் என பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாக சீரியல் சுவாரஸ்யம் நிறைந்ததாக காணப்படுகிறது.

விசாரிக்கும் கண்ணம்மா

விசாரிக்கும் கண்ணம்மா

பாரதியிடம் லட்சுமி தன்னுடைய மகள் தான் என்ற உண்மையை போட்டு உடைக்கும் கண்ணம்மாவிற்கு, டாக்டர் ஒருவரின் மூலம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்த உண்மை தெரிய வருகிறது. இது பற்றிய மாமியார் செளந்தர்யா, அஞ்சலி, துளசி, அகிலன் என தெரிந்த அனைவரிடமும் விசாரிக்கிறாள் கண்ணம்மா. ஆனால் செளந்தர்யா ஏற்கனவே சொல்லி வைத்ததால், அனைவரும் சொல்லி வைத்தது போல் தெரியாது என கூறுகின்றனர். கண்ணம்மாவிற்கு பிறந்தது ஒரு குழந்தை தான் என சொல்கிறார்கள்.

கண்ணம்மாவை மிரட்டும் வெண்பா

கண்ணம்மாவை மிரட்டும் வெண்பா

இதற்கிடையே ஹேமா தனக்கு பிறந்த குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் கண்ணம்மாவிற்கு வருகிறது. இதனால் ஹேமா யார் என்பது பற்றியும் அனைவரிடமும் விசாரிக்கிறாள் கண்ணம்மா. இரட்டை குழந்தை பற்றி துளசியும் கண்ணம்மாவும் பேசிக் கொண்டிருப்பதை கேட்கும் வெண்பா, அதை வைத்து கண்ணம்மாவை மிரட்டி, தன் சொல்படி கேட்க வைக்கிறார். வெண்பாவின் பேச்சை நம்பி கண்ணம்மாவும் அவர் சொல்வதை எல்லாம் செய்ய சம்மதம் சொல்கிறார். இப்படி சற்று போராக கடந்த வார எபிசோட் நிறைவடைந்தது.

மனம் மாறும் பாரதி

மனம் மாறும் பாரதி

இந்நிலையில் சரிந்த டிஆர்பி., ரேட்டிங்கை மீண்டும் உயர்த்தும் விதமாக புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில், பாரதியை பார்க்க வரும் பெண் ஒருவர் சந்தேகத்தால் தனது அண்ணன் - அண்ணி பிறந்த கதையை சொல்கிறாள். இதை கேட்ட பாரதி, கண்ணம்மா மீது தவறு இருக்காதோ, நாம் தான் தவறாக புரிந்து கொண்டோமா என யோசிக்கிறார். அப்போது அங்கு வரும் வெண்பாவிடமும் இதை சொல்கிறார் பாரதி. இதனால் வெண்பா பயங்கர ஷாக் ஆகிறார்.

கண்ணம்மாவுடன் வாழ முடிவு

கண்ணம்மாவுடன் வாழ முடிவு

தனது மனமாற்றத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறார் பாரதி. மீதி இருக்கும் காலத்தை கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ நினைப்பதாக சொல்கிறார் பாரதி. இதைக் கேட்டு அதிர்ச்சி கலந்த, சந்தோஷத்தில் இருக்கிறார்கள் செளந்தர்யாவின் குடும்பத்தினர். இப்படி அந்த ப்ரோமோ முடிகிறது. இதனால் பாரதி - கண்ணம்மா சேர போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். சீரியல் முடிய போகிறதா என்பது போன்ற கேள்விகளையும் சிலர் எழுப்பி உள்ளனர்.

யாருடைய கனவுப்பா இது

யாருடைய கனவுப்பா இது

ஆனால் இது யார் காணும் கனவு என்றே பலர் கமெண்ட்டில் கேட்டுள்ளனர். டிஆர்பி.,க்காக எப்படியெல்லாம் ப்ரோமோ வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். அனேகமாக இது வெண்பா காணும் கனவாக இருக்கலாம் அல்லது செளந்தர்யாவின் கனவு சீனாக இருக்கலாம். டிஎன்ஏ டெஸ்ட் கூட எடுக்காமல் பாரதி எப்படி மனம் திடீரென மனம் திருந்துவார் என பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

மீண்டும் ட்விஸ்ட் வருமா

மீண்டும் ட்விஸ்ட் வருமா

எப்படி இருந்தாலும் மற்றொரு ட்விஸ்ட், சுவாரஸ்யத்திற்கு பாரதி கண்ணம்மா டீம் ரெடியாகி விட்டது என்றே தெரிகிறது. ப்ரோமோவின் காட்டியது கனவா அல்லது நிஜமாக பாரதி மனம் மாறி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ போகும் சமயத்தில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் வைத்து, இருவரும் பிரிய போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X