பாரதிக்கு 2வது திருமணம்.. பொண்ணு யாரு தெரியுமா.. மேடையில் ஓபனாக பேசிய ஹேமா!
சென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக அமைந்துள்ளது பாரதி கண்ணம்மா.
கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் சந்தேகம் எனும் நோய் அவர்களை எந்த அளவிற்கு பிரச்சினையில் தள்ளுகிறது என்பதை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் பாரதிக்கு கண்ணம்மா மீது ஏற்படும் சந்தேகம் காரணமாக அவர்கள் நீண்ட காலங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்றவை உள்ளன. இதில் பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்களை நீண்ட காலங்களாக வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தத் தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி விலகிய நிலையில் தொடரில் டிஆர்பி தொடர்ந்து சறுக்கலில் உள்ளது.

2வது இடத்தில் பாரதி கண்ணம்மா
ஆனாலும் சேனலின் இரண்டாவது இடத்தில் பாரதி கண்ணம்மா தற்போது உள்ளது. தொடர்ந்து போதும் போதும் என்ற அளவில் பல ட்விஸ்ட்களை இயக்குநர் கொடுத்து வருகிறார். ஆனால் பாரதி மற்றும் கண்ணம்மா இவர்களது வாழ்க்கையையே சுற்றி சுற்றி கதை நகர்வதால் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பேச்சுப்போட்டியில் முதலிடம்
பாரதி தான் தன்னுடைய அப்பா என்பது லக்ஷ்மிக்கு தெரிந்த நிலையில், இதுகுறித்து அவர் தன்னுடைய பாட்டி மற்றும் அம்மாவிடம் கேள்வி எழுப்புகிறார். கடந்த வாரத்தில் அந்த நிகழ்வுகள் ஒளிபரப்பான நிலையில், தற்போது பள்ளியின் பேச்சு போட்டியில் பங்குபெறும் ஹேமா முதலிடம் பிடிக்கிறார். இந்தப் பரிசை அவர் மேடையில் வாங்கும்போது தன்னுடைய அப்பாதான் அனைத்திற்கும் காரணம் என்று கூறுகிறார்.

அப்பாவிற்கு கண்ணம்மாவுடன் திருமணம்
இதையடுத்து தன்னுடைய அப்பாவிற்கு தான் திருமணம் செய்து வைக்கவுள்ளதாக அவர் மேடையிலேயே கூறுகிறார். தனக்கு அம்மா இல்லை, லக்ஷ்மிக்கு அப்பா இல்லை என்று அவர் மேடையில் கூறும்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் செய்வது அறியாது திகைக்கின்றனர்.

உண்மை தெரியாத ஹேமா
கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்பது ஹேமாவிற்கு தெரியாது. தற்போது வரை சமையல் அம்மா என்றுதான் அவரை அழைக்கிறார். இந்நிலையில், தங்களுடைய பெற்றோருக்கே மீண்டும் திருமணம் செய்து வைக்க ஹேமா முற்படுவது கதையில் மேலும் ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

வெண்பாவின் திருமணம்
இதன் காட்சிகள் இந்த வார எபிசோட்களில் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே வெண்பாவிற்கு திருமணம் என்று ஒரு பக்கம் அலப்பறையான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தன்னுடைய அம்மா, அப்பாவிற்கே ஹேமா மீண்டும் திருமணம் செய்வதாக கூறியுள்ளது ரசிகர்களை மேலும் ஆர்வம் கொள்ள செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











