Don't Miss!
- News
நாட்டிலேயே எளிமையான முதல்வர் ஸ்டாலின்.. ஏற்றத்தாழ்வே காட்ட மாட்டாரு - அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம்
- Automobiles
உல்லாச கப்பலில் எல்லாத்தையும் அனுபவிக்க இப்படி ஒரு வழி இருக்கா? இதை எல்லாம் இப்பவே தெரிஞ்சு வெச்சுக்கணும்!
- Finance
உங்கள் வாகனம் தொலைந்துவிட்டதா? சாவி இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?
- Sports
அன்று யுவ்ராஜ் சிங், இன்று பும்ரா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை.. அதுவும் பிராட் பவுலிங்கில்..
- Lifestyle
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
லஷ்மி குறித்த ரகசியம்... ரகசியத்தை தெரிந்துக் கொண்டு பரிதவிக்கும் கண்ணம்மா... அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்!
சென்னை : விஜய் டிவியின் முக்கிய மற்றும் முன்னணி சீரியல்களில் முதன்மையாக காணப்படுகிறது பாரதி கண்ணம்மா.
இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடரிலிருந்து விலகியதை அடுத்து சீரியலின் டிஆர்பி குறைந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சிரியல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் இந்த விஷயங்கள் தெரியவந்துள்ளது.
விஜய்
தேவரகொண்டாவுடன்
லிப்
லாக்
காட்சியா...சமந்தா
என்ன
சொல்லிருக்கார்
தெரியுமா
?

விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். ஒரு தொடரின் டிஆர்பி குறைகிறது என்றால் அந்தத் தொடரை எப்படி ரசிகர்களிடையே கொண்டு செல்லலாம் என்பதை கணித்து அந்தத் தொடரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்வதில் விஜய் டிவிக்கு இணை யாருமில்லை என்று சொல்லலாம்.

முதலிடத்தில் விஜய் டிவி
தற்போது விஜய் டிவிக்கு போட்டியாக நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் ஜீ தமிழ், கலர்ஸ் உள்ளிட்ட மற்ற சேனல்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் தன்னுடைய முதன்மை இடத்தை விட்டுக் கொடுக்காமல் உள்ளது விஜய் டிவி. அந்த வகையில் இந்த டிவியின் சீரியல்களும் முக்கியமான இடத்தை பெற்று விடுகின்றன.

சீரியல்களின் 2வது சீசன்கள்
அந்த வகையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா போன்ற தொடர்கள் முன்னிலையில் உள்ளன. சில சீரியல்களின் 2வது சீசனும் துவங்கப்பட்டு அவையும் இந்த பந்தயத்தில் இணைந்துள்ளன. குறிப்பாக ராஜா ராணி போன்ற தொடர்களை கூறலாம்.

அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்
இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா தொடர் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கணவன் -மனைவி, அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்த நினைக்கும் வில்லி, மருமகளுக்கு ஆதரவான மாமியார், நாயகியின் குழந்தைகள், அவர்கள் தேடும் உண்மை என பல எபிசோட்களை இந்த தொடர் கடந்துள்ளது.

சுதாரித்த பாரதி கண்ணம்மா
ஒரு கட்டத்தில் கணவன் -மனைவி மற்றும் வில்லியை சுற்றியே நகர்ந்து வந்த இந்த தொடரில் நாயகியாக கண்ணம்மா கேரக்டரில் சிறப்பாக நடித்துவந்த நடிகை ரோஷினி தொடரிலிருந்து விலகிய நிலையில் தொடரின் டிஆர்பி இறங்கியது. இதையடுத்து தற்போது தொடர் சுதாரித்துக் கொண்டுள்ளது.

சூடுபிடிக்க துவங்கிய தொடர்
இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தற்போது தொடர் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. டாக்டர் பாரதியின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, அதற்கான போராட்டம், நாயகியின் உதவி என்று மாற்றுக் கோணத்தில் தொடரை தந்து வருகிறார் இயக்குநர். இந்நிலையில் தற்போது தொடரில் அடுத்த ட்விஸ்டும் காணப்படுகிறது.

ரகசியத்தை தெரிந்துக்கொண்ட கண்ணம்மா
தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் லஷ்மிக்கு தன்னுடைய அப்பா யார் என்ற உண்மை தெரிந்துள்ளதை கண்ணம்மா தெரிந்துக் கொள்கிறார். லஷ்மி தன்னுடைய அப்பாவின் பெயர் பலகையை வீட்டில் எடுத்துவந்து ஒளித்து வைத்துள்ளதை அவர் பார்த்து விடுகிறார். இதுகுறித்து தன்னுடைய மாமியாருக்கும் வீடியோ கால் மூலம் அவர் தெரியப்படுத்துகிறார்.

அடுத்தடுத்த மாற்றங்கள்
இந்நிலையில் வரும் வாரங்களில் இந்தத் தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களை எதிர்பார்க்கலாம். தொடர்ந்து ஒரே மாதிரி தொடர் செல்வதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், தற்போது அடுத்தடுத்த மாற்றங்களுடன் திரைக்கதை நகர்வது அவர்களை மீண்டும் பாரதி கண்ணம்மா தொடருடன் இணைத்துள்ளது.