600 எபிசோட்களை கடந்த பாரதி கண்ணம்மா... வாழ்த்துடன் கலாய்க்கும் ரசிகர்கள்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ம் தேதி துவங்கப்பட்டது. பலரின் மனம் கவர்ந்த இந்த சீரியல், தற்போது 600 எபிசோட்களை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்கள், பாரதி கண்ணம்மா டீமுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மலையாளத்தில் கருத்த முத்து என்ற பெயரில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. தமிழில் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் இந்த சீரியல் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் இந்த சீரியல் பெற்று, ஹிட் ஆகி உள்ளது.

கண்ணம்மாவை வெறுக்கும் செளந்தர்யா

கண்ணம்மாவை வெறுக்கும் செளந்தர்யா

கறுப்பாக இருப்பதால் பல்வேறு சித்தி கொடுமைக்கு ஆளாகும் கண்ணம்மா மீது காதல் கொள்கிறான், டாக்டரான பாரதி. குடும்பத்தை எடுத்து நடக்கும் இவர்களின் திருமணத்தை ஏற்க மறுக்கிறாள் பாரதியின் அம்மா செளந்தர்யா. கறுப்பாக இருப்பது, படிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி ஆரம்பத்தில் கண்ணம்மாவை வெறுக்கிறாள் செளந்தர்யா. பிற கண்ணம்மாவின் நல்ல மனதை புரிந்து கொள்ளும் செளந்தர்யா, கண்ணாம்மா மீது அன்பை பொழிகிறாள். இதற்கிடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ணம்மா கர்ப்பமாகிறாள்.

வெண்பாவின் சதி வேலை

வெண்பாவின் சதி வேலை

ஆனால் பாரதியை கல்லூரியில் படிக்கும் போதிருந்தே ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா, பாரதியையும், கண்ணம்மாவையும் பிரிக்க பல்வேறு சதி வேலைகளை செய்கிறாள். வெண்பாவின் சூழ்ச்சியில் சிக்கும் பாரதி, கண்ணம்மா மீது சந்தேகப்படுகிறான். இதனால் கர்ப்பிணியான கண்ணம்மா, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். ஊர் ஊராக சுற்றித் திரியும் கண்ணம்மாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். இதைத் தெரிந்து கொள்ளும் செளந்தர்யா, ஒரு குழந்தையை கண்ணம்மாவிற்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள்.

ஹேமாவிடம் பாசம் காட்டும் கண்ணம்மா

ஹேமாவிடம் பாசம் காட்டும் கண்ணம்மா

தத்தெடுத்த குழந்தை எனக்கூறி பாரதியிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறாள். ஹேமா தனக்கு பிறந்த குழந்தை என தெரியாமலேயே பாசத்தை பொழிகிறான் பாரதி. மற்றொரு குழந்தையான லட்சுமி, கண்ணம்மாவிடம் வளர்க்கிறாள். சந்தர்ப்ப சூழலால் மீண்டும் கண்ணம்மா, செளந்தர்யா, பாரதியின் சந்திப்பு நிகழ்கிறது. ஹேமா படிக்கும் பள்ளியிலேயே லட்சுமியும் சேர்கிறாள். இருவரும் நண்பர்களாகிறார்கள். இவர்கள் படிக்கும் பள்ளியில் சமையல் செய்து தரும் வேளையில் சேரும் கண்ணாம்மா மீது ஹேமாவிற்கு பாசம் ஏற்படுகிறது. தனது குழந்தை என தெரியாமல் ஹேமா மீது பாசம் காட்டுகிறாள் கண்ணம்மா.

உண்மையை அறியும் கண்ணம்மா

உண்மையை அறியும் கண்ணம்மா

பிறகு டாக்டர் ஒருவர் மூலம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்த உண்மையை தெரிந்து கொள்ளும் கண்ணம்மா, தனக்கு பிறந்த இன்னொரு குழந்தை யார், எங்கிருக்கிறாள் என தேடி அலைகிறாள். இதைத் தெரிந்து கொண்ட வெண்பா, அந்த குழந்தை தன்னிடம் தான் உள்ளதாக கூறி கண்ணம்மாவை மிரட்டுகிறாள். கண்ணம்மாவும் அதை நம்பி, வெண்பா சொல்வதை எல்லாம் செய்ய தயாராகிறாள். இப்படி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கதை செல்கிறது.

600 எபிசோட்கள்

600 எபிசோட்கள்

தற்போது 600 எபிசோட்களை கடந்துள்ள பாரதி கண்ணம்மா டீமுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் சிலர், ஆயிரமாவது எபிசோட்டிலாவது பாரதிக்கு குழந்தைகள் யார் என்பதை தெரிய வைப்பீர்களா, எல்லாம் ஓகே தான். அந்த டிஎன்ஏ டெஸ்ட்டை எப்போது எடுப்பீர்கள் என கேட்டு பலவிதங்களில் கலாய்கிறார்கள். மேலும் சிலர், 600 வது எபிசோட் என்கிறீர்கள் சுவாரஸ்யமாக எதுவும் நடக்கவில்லையே, அடுத்த ட்விஸ்ட் எப்போது என கேட்டு வருகின்றனர்.

டல்லடிக்கும் சீரியல்

டல்லடிக்கும் சீரியல்

கடந்த சில நாட்களாக இந்த சீரியலில் சுவாரஸ்யம் குறைந்தும், லாஜிக்கே இல்லாமல் வெண்பா சொல்வதை நம்பி கண்ணம்மாவும் அழுது வடிவதால் பாரதி கண்ணம்மா சீரியலின் ரேட்டிங் குறைந்துள்ளது. அதனால் டிஆர்பி ரேட்டிங்கில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க விரைவில் புதிய ட்விஸ்ட் எதையாவது வைப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X