நீயே உயிரோட இருக்கும் போது… நான் ஏன்டா சாகனும்…கோவத்தின் உச்சத்தில் கண்ணம்மா !

சென்னை : விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா.

பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில், கண்ணம்மா பாரதியை பார்த்து தாறுமாறாக கேள்வி கேட்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இத்தனை நாள் அனைத்து பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்த கண்ணம்மா இன்று பொங்கி எழுகிறாள். ஸோ இன்றைக்கு பாரதிகண்ணம்மா சீரியலில் தரமான சம்பவம் இருக்கு.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா வலம் வருகிறது. கடந்த இரு வாரங்களாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து பெரும் எதிர்பார்ப்பை இந்த சீரியல் ஏற்படுத்தியது.

கடற்கரையில் சந்திப்பு

கடற்கரையில் சந்திப்பு

அடுத்ததாக, கடற்கரையில் பாரதியும் கண்ணம்மாவும் சந்திக்கிறார்கள். அப்போது பழசையெல்லாம் இருவரும் நினைத்து பார்க்கிறார்கள். பின்னர் கண்ணம்மா, டாக்டர் பாரதிக்கிட்ட இல்லாம, நான் என் பாரதி மாமா கூட பேச விரும்புறேன் என்கிறாள். அப்போது பாரதியை பற்றி புகழ்ந்து பேச, நக்கலாக சிரிக்கும் பாரதி, நானும் என் பழைய கண்ணம்மாகிட்ட தான் பேச விரும்புறேன் என்கிறாள். அப்போது பாரதி கண்ணம்மாவை முதன்முதலில் பார்த்ததை பற்றி காதலுடன் சொல்கிறான். உடனே கண்ணம்மா என்கிட்ட எந்த மாற்றமும் இல்லை, நான் பழைய கண்ணம்மா தான் என சொல்ல, வெறுப்பாக பார்க்கிறான் பாரதி இப்படியே எபிசோடு முடிந்தது.

இன்றைய ப்ரோமோ

இன்றைய ப்ரோமோ

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ இல்லத்தரசிகளுக்கு பெரிய அதிர்ச்சிஅடைய செய்துள்ளது. இதில், கண்ணம்மா பாரதி கடுமையாக பேசுகிறார். கட்டுன பொண்டாட்டிய வச்சிவாழத்தெரியல, பெத்த குழந்தையை ஏத்துக்குற மனசும் இல்ல, எவளோ ஒருத்தியை பொண்டாட்டினு சொல்லிக்கிட்டு ஊரு எல்லாம் நடிச்சிக்கிட்டு வெளியில சுத்துற நீயே உயிரோட இருக்கும் போது, நான் ஏன்டா சாகனும். நான் செத்துடலானு நினைச்ச காலம் ஒன்னு உண்டு. அந்த காலம் எப்பவோ மலையேறிப் போச்சு. இப்போ நான் வாழ்த்து காட்டுவேன். நீ வெந்து சாகுற அளவுக்கு வாழ்த்து காட்டுவேன். என்று செம கெத்தா பேசுகிறார் கண்ணம்மா.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

பாரதியும் கண்ணம்மாவுன் கடற்கரையில் ஒருவரை ஒருவர் சந்தித்து மனம் விட்டு பேசிய பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து விடுவார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது இந்த ப்ரோமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X