பாரதி கண்ணம்மா வினுஜாவுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?.. உச்சு கொட்டிய ரசிகர்கள் !
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்று.
கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பாரதி. கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.
கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஜா,சீரியலில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து மிகவும் பிஸியாக இருப்பதாக கூறியுள்ளார்.

சுவாரசியம் குறைந்தது
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க பல்வேறு ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய மாற்றம் ஏற்பட்டு வினுஜா தேவி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த நேரத்தில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஃபரீனாவும் டெலிவரிக்கு சென்றதால் பாரதி கண்ணம்மா சீரியல் சுவாரசியமே இல்லாமல் இருந்தது.

சீரியல் சூடுபிடித்தது
இதையடுத்து, விவாகரத்து கேட்டு பாரதி நீதிமன்றம் சென்றதை அடுத்து , நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரும் ஒரே வீட்டில் இருந்தனர். இதனால், இருவருக்குள்ளும் டச்சிங் டச்சிங் ரொமான்ஸ் தாறுமாறாக போய் பாரதி கண்ணம்மா மீண்டும் சூடுபிடித்து வருகிறது.

இப்ப முடியாது போல
அதே நேரத்தில் ஃபரீனாவும் என்ட்ரி கொடுத்துவிட்டதால், சீரியல் தற்போது சீரியசாக போய்கொண்டு இருக்கிறது. கடந்த மாதமே இருவரும் சேர்ந்து விடுவார்கள் சீரியல் முடிந்துவிடும் என்று பார்த்தால், இயக்குநர் ஜவ்வுப்போல தொடரை இழுத்துக்கொண்டு இருக்கிறார். இருந்தாலும் கண்ணம்மாவாக வினுஜா தேவியை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

கண்ணம்மா படு பிஸி
நடிகை வினுஜா அளித்துள்ள பேட்டியில், நான் கருப்பாக, உயரமாக இருப்பதால் நிறைய பேர் கேலி கிண்டல் செய்தனர். சீரியலில் நடிக்க வந்தபோது கூட பலர் என்னை கிண்டலடித்தனர். ஆனால், இப்போது அனைவரும் கண்ணம்மாவாக என்னை ஏற்றுக்கொண்டனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், வினுஷா தேவி சீரியலில் நடிப்பதை தாண்டி இரவில் IT துறையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் காலையில் ஷூட்டிங், இரவில் ஐடி கம்பேனி என எப்போதும் பிஸியாக இருக்கிறார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அடப்பாவமே என உச்சுகொட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











