டைவர்ஸ் வேண்டாம்.. மகள் ஹேமாவின் கதறல்.. பாரதி எடுக்கும் அதிர்ச்சிகரமான முடிவு!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா இருந்து வருகிறது.

சமீப காலங்களில் இந்த தொடரின் டிஆர்பி குறைந்துவரும் நிலையில், அடுத்தடுத்து அரைத்த மாவையே அரைத்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரமோவில் மகளின் கதறலையடுத்து பாரதி முக்கியமான முடிவை எடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரின் சிறப்பான கேரக்டர்கள் மற்றும் காட்சி அமைப்புகள் தொடரை டிஆர்பியிலும் முன்னேற்றியது. தொடர்ந்து சிறப்பான பல எபிசோட்களை தந்து வந்தது. ஆனால் அதற்கு பிறகுதான் மாற்றமே ஏற்பட்டது.

ரோஷினியின் விலகல்

ரோஷினியின் விலகல்

இந்தத் தொடரின் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தவிர்க்க முடியாத காரணங்களால் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து அவரை கண்ணம்மாவாகவே பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் இதனால் தொடரின் மற்ற விஷயங்களை பார்க்கத் துவங்கினர். தொடர் தொடர்ந்து அரைத்த மாவையே அரைத்து வருவது அவர்களை சலிப்பிற்குள்ளாக்கியது.

ஒரே மாதிரியான காட்சிகள்

ஒரே மாதிரியான காட்சிகள்

ரோஷினி விலகல் தொடர்ந்து பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவைப் பற்றிய காட்சிகள், குழந்தைகள் குறித்த ஒரே மாதிரியான காட்சிகள் என தொடர்ந்து ஒரே காட்சிகளை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடர் எப்போது முடியும் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு தொடர் தற்போது மாறியுள்ளது.

விட்டுக் கொடுத்த முதல் இடம்

விட்டுக் கொடுத்த முதல் இடம்

தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர் தற்போது தன்னுடைய முதலிடத்தை பாக்கியலட்சுமியிடம் விட்டுக் கொடுத்துள்ளது. இதனிடையே தொடர்ந்து கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் முடிவிலிருந்து பின்வாங்காமல் இருந்த பாரதியிடம் தற்போது தடுமாற்றம் காணப்படுகிறது.

கதறியழும் ஹேமா

கதறியழும் ஹேமா

தற்போதைய எபிசோடில் மாமியார் வீட்டிற்கு கண்ணம்மா மற்றும் லஷ்மி வருகிறார்கள். அப்போது அங்குவரும் பாரதி இவர்களை பார்த்து தடுமாடுகிறார். அவருடன் வரும் ஹேமா சமையலம்மா என்று கண்ணம்மாவை கட்டிப் பிடித்து உற்சாகமடைகிறார். தொடர்ந்து தன்னுடைய அம்மா உயிருடன் இருக்கும்போது தன்னுடைய அப்பா அவரை டைவர்ஸ் செய்கிறார் என்று கதறி அழுகிறார்.

பாரதியின் உறுதியான முடிவு

பாரதியின் உறுதியான முடிவு

கண்ணம்மாவிடம் தன்னுடைய தந்தை இவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறுமாறும் கேட்கிறார். இதைப் பார்க்கும் பாரதி, தான் கண்ணம்மாவை டைவர்ஸ் செய்ய மாட்டேன் என்று உறுதியுடன் கூறுகிறார். இதை கேட்கும் கண்ணம்மா, சவுந்தர்யா உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக எபிசோட் முடிகிறது.

விரைவில் நிறைவு?

விரைவில் நிறைவு?

இது மட்டுமில்லாமல் வெண்பாவிற்கு சாப்பாடு தயாரித்து தருகிறார் கண்ணம்மா. இப்படியாக தொடரின் கதையோட்டங்கள் காணப்படுகின்றன. இதனால் கூடிய விரைவில் பாரதி கண்ணம்மா தொடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X