சீரியல் பரிதாபங்கள்: என்ன சக்திமான் மாதிரி ஏர்ல பறக்குறாங்க.. நியூட்டன் கார்னர்ல சிரிக்கிறாரு!
மும்பை: பாலய்யாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு போஜ்புரி படங்களும் சீரியல்களும் உருவாகி வருகின்றன. தமிழ் சீரியல்களில் பிளாஸ்டிக் சர்ஜரி காமெடியெல்லாம் நடந்து வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளன. இந்தி சீரியல்களிலும் ஒருவரை தள்ளி விட துப்பட்டா ஃபேனில் சுற்றிக் கொண்டு கழுத்தை நெறிக்கும் கர்ணக் கொடூரமான காட்சிகள் எல்லாம் அரங்கேறி உள்ளன. இந்நிலையில், அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இன்னொரு சூப்பர் சீன் தற்போது தீயாக பரவி வருகிறது.
சில திரைப்படங்களின் சிஜிக்கள் எல்லாம் சிரிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பயங்கர காமெடியாக இருக்கும். சீரியலில் மினி பட்ஜெட் என்கிற நிலையில், இஷ்டத்துக்கு எடுக்கிறோம் என இயக்குநர்கள் சிலர் ஸ்டன்ட் சீன்களில் நியூட்டனையே வியக்க வைக்கும் அளவுக்கு கிராவிட்டிக்கு எதிரான காட்சிகளை செய்து சிரிக்க வைத்து வருகின்றனர். அப்படியொரு காட்சி தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.

கில்லி முத்துப்பாண்டி சீன் போல: கில்லி படத்தில் லாரி ஏறி தப்பித்துச் செல்கிறேன் என நடிகை திரிஷா முத்துப்பாண்டி லாரியிலேயே ஏறி அவரது ரைஸ் மில்லுக்கே வந்து மாட்டிக் கொள்ளும் காட்சியில், திரிஷாவை முத்துப் பாண்டி துரத்திக் கொண்டு செல்வார். அதே போல வில்லன் ஹீரோயினை துரத்திக் கொண்டு பலாத்காரம் செய்ய முற்படும் நேரத்தில் வில்லனை தள்ளி விட்டு அந்த ஹீரோயின் கவர்ச்சி பொங்க ஓடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வாட்டர் கேனை தூக்கி ஒரே அடி: என்னை விட்டா ஓடுற நீ என நினைத்த வில்லன் வாட்டர் கேனை தூக்கி ஹீரோயினை ஒரே அடி அடிக்க அப்போதுதான் அந்த ஏரில் பறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹீரோயின் மட்டும் தான் ஏரில் பறந்து கீழே விழப் போகிறார் என்று பார்த்தால் ஹீரோயினை காப்பாற்ற ஏரிலேயே ஹீரோ வந்து காப்பாற்றுவது அதை விட கொடுமையாக உள்ளது.
சக்திமான் போல பறக்குறாங்களே: சீலிங்கில் கட்டித் தொங்கவிட்டு சக்திமான் சீரியலுக்கு 90களில் செய்த சிஜிக்கள் போல தற்போது ஹீரோயினையும், ஹீரோவையும் அந்தரத்தில் ரோப் கட்டி பறக்கவிட்டு எடுத்த காட்சிகள் வெளியான நிலையில், பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











