வேலை வெட்டி இல்லாத பயந்தாங்கொல்லி.. ‘பிக்பாஸை’ விமர்சித்த ஸ்ரீபிரியாவுக்கு காயத்ரி பதிலடி!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த நடிகை ஸ்ரீபிரியாவின் கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்த கருத்திற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை காயத்திரி ரகுராமும் ஒருவர். அந்நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை பெற்றார்.

எபிசொட் ஒன்றில் சகபோட்டியாளரை ஹேர் எனப் பொருள்படும் வகையில் திட்டியதால், கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் சந்தித்தார்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. அதில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

காயத்ரியின் சவால்:

இதற்கு பதிலடி தரும் விதமாக காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தைரியம் இருந்தால், ஸ்ரீப்ரியா பிக் பாஸ் வீட்டில் சென்று வசித்துப் பார்க்கட்டும்' என சவால் விடுத்துள்ளார்.

நலம் விரும்பியல்ல:

மேலும் இதுதொடர்பாக அப்பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது, " அக்கா என அழைப்பதற்கு ஸ்ரீப்ரியா எனது சகோதரி அல்ல. அதேபோல் என் தோழியோ, அத்தையோ, நலம்விரும்பியோ அல்லது என் முதலாளியோ அல்ல. அவருடைய தயவினால் சாப்பிடும் சூழ்நிலையிலும் நான் இல்லை.

வேலை வெட்டியில்லாதவர்கள்:

அவருக்கு ஹேர் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக தெரியலாம், பிடிக்காமல் கூட இருக்கலாம். பின்னர் ஏன் அதை அவர் வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால், ஸ்ரீப்ரியா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று தங்கட்டும்", என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

கெட்ட வார்த்தையா?

அவருக்கு ஹேர் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக தெரியலாம், பிடிக்காமல் கூட இருக்கலாம். பின்னர் ஏன் அதை அவர் வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் சாவல் விடுகிறேன். தைரியம் இருந்தால், ஸ்ரீப்ரியா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று தங்கட்டும்", என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள்:

வேண்டுகோள்:

அதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்க வேண்டும் என மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்ளே நடப்பது அனைத்தும் மக்களுக்கு காட்டப்படுவதில்லை என்பதால், உடனடியாக ஒருவரை பற்றி தீர்மானத்துக்கு வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே பிக் பாஸ் 2 போட்டியாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X