பிக்பாஸ் 2 : எஜமானர்களுக்கு அட்வைஸ்... சந்து கேப்பில் சிந்து பாடிய மஹத் !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஜமானர்கள் அணிக்கு அறிவுரை கூறினார் மஹத்.

சென்னை: சத்தமில்லாமல் பெண்கள் அணிக்குள் கலகம் மூட்டும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 2வில் பன்னிரண்டாம் நாளான நேற்று, பெண்கள் எஜமானிகளாகவும், ஆண்கள் வேலைக்காரர்களாகவும் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல, மஹத் பெண்களுக்கு விழுந்து, விழுந்து வேலை செய்து கொண்டிருந்தார். ஜனனிக்கு அவர் நெயில்பாலீஷ் போட்டு விட்டதெல்லாம் வேற லெவல்.

ஏற்கனவே, இதே டாஸ்க் வேறு மாதிரி மாற்றி நடந்ததால், முடிவு எப்படி இருக்கும் என்பதை இரு அணிகளும் அறிந்தே வைத்திருந்தனர். எனவே, எப்படியும் டாஸ்கின் முடிவில் சிறந்த எஜமானி மற்றும் வேலைக்காரரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரிந்து இருந்ததால், இருதரப்பும் அடக்கி வாசித்தது.

ஆங்கிரி பேர்டான ஆண்கள்:

ஆங்கிரி பேர்டான ஆண்கள்:

ஆனபோதும், தங்களை வீட்டு வேலை செய்ய வைத்து விட்டார்களே என்ற ஆதங்கம் ஆண்கள் அணியில் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அதை வெளிக்காட்டும் வகையில் சிடுசிடுவென ஆங்கிரி பேர்டுகளாக வேலைகளைச் செய்தனர். எப்போதும் சிரிக்க சிரிக்க பேசும் டேனி கூட கோபப்பட்டார்.

ரகசியம்:

ரகசியம்:

இதற்கிடையில் கிடைத்த கேப்பில், ஜனனி, ரம்யா, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம், சிறந்த எஜமானியாக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார் மஹத். பிக்பாஸ் அறிவுரைப்படி எஜமானிகள் சேர்ந்து உதவியாளர்களுக்குத் தெரியாமல் தான், சிறந்த எஜமானி மற்றும் வேலையாளை ரகசியமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மமதி:

மமதி:

ஆனால், இதற்கு மாறாக மஹத், ‘சிறந்த எஜமானிகளாக நித்யா, வைஷ்ணவி, மமதி' ஆகிய மூன்று நபர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்' என தனது எஜமானர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனை மறுப்பு ஏதும் சொல்லாமல் அந்த மூன்று எஜமானர்களும் கேட்டுக் கொண்டிருந்தார்.

 மஹத்தின் திட்டம்:

மஹத்தின் திட்டம்:

மஹத் கூறிய மூன்று பேருடனுமே அவருக்கு ஏற்கனவே பிரச்சினை இருந்தது. எனவே, இம்முறை அவர்களை சிறந்த எஜமானிகளாகத் தேர்வு செய்தால், அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது. எனவே, அதனைத் தடுத்து விட வேண்டும் என்பது தான் மஹத்தின் எண்ணம். சந்து கேப்பில் சிந்து பாடி, தனக்கும் பாலிடிக்ஸ் பண்ண வரும் என இதன் மூலம் நிரூபித்தார் மஹத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X