பிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்!

பிக்பாஸ் சீசன்2விலும் தூங்குபவர்களை எழுப்ப நாயின் குரல் ஒலிக்குமாம்.

By Jaya Chitra

சென்னை: பிக்பாஸ் சீசன் 2விலும் பகலில் தூங்கும் போட்டியாளர்களை எழுப்ப நாயின் குரைப்பு சத்தம் கேட்குமாம்.

பிக்பாஸ் சீசன் 2 நாளை முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் கலந்து கொள்ளப் போகிறவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்களுக்கு இணையாக பிக்பாஸ் வீட்டில் ஒரு அங்கமாக இருப்பது ஒரு நாய். கடந்த சீசனிலேயே பகலில் தூங்குபவர்களை எழுப்பி விடும் வேலையை அந்த நாய் பார்த்தது.

இதற்காக ரைசா உள்ளிட்டவர்களிடம் வசமாக வாங்கிக் கட்டியும் கொண்டது.

கண்டபடி திட்டு:

கண்டபடி திட்டு:

இதனால், ரைசா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது, அவர் திட்டியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக, நாய் பொம்மை ஒன்றை ஸ்ரெட்சரில் தூக்கி வந்து காமெடி செய்தார்கள். அந்தளவில் கண்டபடி ரைசாவிடம் அந்த நாய் கடந்தமுறை திட்டு வாங்கியது.

 பகல் தூக்கம்:

பகல் தூக்கம்:

இந்நிலையில், சீசன் 2விலும் அதே வேலையை கண்ணும் கருத்துமாக செய்ய அதே நாய் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாம். நிச்சயம் பகலில் தூங்கும் போட்டியாளர்களை அது குரைத்து குரைத்து எழுப்பும் என்பது உறுதி.

காவலாளி:

காவலாளி:

பகலில் தூங்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வேண்டுமானால் அந்த நாயின் குரல் நாராசமாக இருந்திருக்கலாம். ஆனால், பார்வையாளர்களுக்கோ விடாமல் குரைத்து தூங்கும் போட்டியாளர்களை நான்ஸ்டாப் டிஸ்டர்ப் செய்த அந்த நாயின் குரல் மிகவும் பிடித்திருந்தது. இதனால், அந்த வீட்டின் கண்ணுக்குத் தெரியாத காவலாளியாகவே முதல் சீசனில் அந்த நாய் இருந்தது.

மகிழ்ச்சி:

மகிழ்ச்சி:

தற்போது இரண்டாவது சீசனிலும் அந்த நாய் இருக்கப்போவது போட்டியாளர்களை வேண்டுமானால் எரிச்சலடைய வைத்திருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு இந்தத் தகவல் நிச்சயம் மகிழ்ச்சியையே தந்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X