பிக்பாஸ் 2 : வலது கால் வைத்து வீட்டில் இன்று குடியேறும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் சீசன் 2 தொடக்க விழாவிற்கான ஷூட்டிங் இன்று நடைபெறுகிறது.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்கள் இன்று இரவு முதலே பிக்பாஸ் வீட்டில் வாழத் தொடங்கி விடுவார்கள்.
பிக்பாஸ் சீசன் 2, நாளை இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தொடக்க விழாவில் கமல் கலந்து கொண்டு, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். இதற்கான பிரம்மாண்ட விழா இன்று நடைபெற இருக்கிறது.

நாளை ஒளிபரப்பாகும் தொடக்க விழாவிற்கான ஷூட்டிங் இன்றே நடந்துவிடும். போட்டியாளர்களும் தங்கள் பெட்டி, படுக்கையுடன் பிக்பாஸ் வீட்டில் இன்று இரவு முதலே வசிக்கத் தொடங்கி விடுவார்கள்.
பிக்பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னதாகவே அவர்களிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டு விடும். இதனால், வெலியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல், தொலைத்தொடர்பு சாதன வசதி எதுவும் இல்லாமல் இன்று முதல் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வசிக்கத் தொடங்கி விடுவார்கள்.
மக்களைப் போலவே போட்டியாளர்களுக்கும் சக போட்டியாளரின் விபரங்கள் எதுவும் தெரியாது எனக் கூறப்படுகிறது. எனவே, இன்றைய படப்பிடிப்பின் போது தான் போட்டியாளர்களுக்கும் தங்களுடன் ஒரே வீட்டில் வசிக்கப் போகும் சக போட்டியாளர்கள் பற்றிய விபரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக நமக்கெல்லாம் நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியதும் தான் குதூகலம் என்றால், போட்டியாளர்களுக்கோ இன்று இரவு முதலே கச்சேரி களைக்கட்ட ஆரம்பித்து விடும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications











