அந்த வருத்தம் துரத்துகிறது.. சாண்டிக்கும் காஜலுக்கும் ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதா? பரபர பதில்!
பிக்பாஸ் போட்டியாளர் சாண்டிக்கும், முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதிக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர் சாண்டிக்கும், முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதிக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு காஜல் பசுபதி விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மிக முக்கியமான போட்டியாளராக இருக்கிறார் நடன இயக்குனர் சாண்டி. இவர் நிறைய டிவி சேனல்களில் பணியாற்றி அதன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
டிவி சேனல்களில் நடன இயக்குனராக பணியாற்றிய போது இவர் நடிகை காஜல் பசுபதியை காதலித்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

என்ன திருமணம்
அதன்பின் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவகாரத்து செய்து விட்டனர். இதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

வைரல்
இந்த நிலையில் சாண்டிக்கும் காஜல் பசுபதிக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அதை சாண்டி மறைத்துவிட்டார். இதை யாருக்கும் வெளியே தெரியாமல் மறைத்துவிட்டுதான் சாண்டி திருமணம் செய்தார் என்று இணையத்தில் சிலர் டிவிட் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார்கள்.

நிறைய பிரச்சனை
சாண்டிக்கு சமூக வலைதளத்தில் நல்ல பெயர் இருக்கிறது. இவர் பிக்பாஸ் தொடரிலும் நல்ல பெயர் எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு எதிராக மிகவும் கடுமையான புகார்கள் இணையத்தில் வைக்கப்பட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது.
என்ன பதில்
இந்த நிலையில் இரண்டு குழந்தைகள் குறித்து வெளியாகும் இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு தற்போது காஜல் பசுபதி பதில் அளித்துள்ளார். அதில், எனக்கு சாண்டியுடன் திருமணம் ஆனது. பின் விவாகரத்து நடந்தது. ஆனால் குழந்தைகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மை கிடையாது. அந்த குழந்தைகள் என்னுடைய உறவினர் குழந்தைகள், என்று கூறியுள்ளார்.
சர்ச்சைக்கு பதில்
அதேபோல் அவர் தனது இன்னொரு டிவிட்டில், எனக்கு குழந்தைகள் கிடையாது. நான் எனது வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேன். இதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நான் வருத்தப்படும் ஒரே விஷயம் இதுதான், என்று காஜல் பசுபதி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











