பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே வாய்ப்பு கேட்ட சாண்டி.. ஓகே சொன்ன கமல்ஹாசன்.. காத்திருக்கும் வாய்ப்பு!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் சாண்டிக்கு கமல்ஹாசன் படத்தில் பணிபுரியும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக கூறுகிறார்கள்.
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் சாண்டிக்கு கமல்ஹாசன் படத்தில் பணிபுரியும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக கூறுகிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாட்களை தாண்டி இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்து இருக்கிறது.
பிரம்மாண்டமான இறுதி நிகழ்ச்சி தற்போது தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

தர்ஷன் வாய்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே தர்ஷன் சினிமா வாய்ப்பை பெற்றுவிட்டார். அதிலும் இவருக்கு ஜாக்பாட் அடித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். இவர் நேரடியாக கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

கமல்ஹாசன்
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக நடன இயக்குனர் சாண்டி வாய்ப்பு கேட்டு இருக்கிறார். இன்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக அவர் கமல்ஹாசனிடம் இது குறித்து வாய்ப்பு கேட்டார். வெளியே போய் உங்களை சந்திக்க வேண்டும் என்று சாண்டி கோரிக்கை வைத்தார்.

பார்க்கலாம்
இதற்கு கமல்ஹாசன் வெளியே போய் கண்டிப்பாக நாம் பார்க்கலாம் என்று கூறினார். வெளியே உங்களை பற்றி பலர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் வெளியே சென்றால் பெரிய மரியாதை கிடைக்கும், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

பிக்பாஸ் எப்படி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி இரண்டாவது இடம் பெற்றுள்ளார். முகேன் ராவ் வெற்றி பெற்றுள்ள நிலையில் சாண்டி இந்த போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











