கமல்ஹாசனை தொல்லை செய்த சாண்டி.. கடுப்பில் கண்டித்த பிக்பாஸ்.. இறுதிப்போட்டியில் பரபர!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாண்டியை பிக்பாஸ் கண்டித்தது பெரிய வைரலாகி உள்ளது.
தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மூன்றாவது சீசன் தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது.
மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட பலரும் தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளனர். ஒருவழியாக இந்த நிகழ்ச்சி தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

சாண்டி எப்படி
இந்த நிகழ்ச்சியின் இன்று இறுதி நாள் என்பதால் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அங்கு இருந்த இறுதிப்போட்டியாளர்கள் சாண்டி, முகேன் ராவ், லாஸ்லியா, ஷெரின் ஆகியோரிடம் பேசினார். எல்லோருக்கும் தனி தனியாக கவிதை அனுப்பினார்.

என்ன கேட்டார்
இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியே செல்லும் போது சாண்டி உடன் வருவதாக குறிப்பிட்டார். உங்களை வந்து நான் வெளியே விடுகிறேன். உங்களுடனே வருகிறேன். எனக்கு இதுதான் ஆசை, என்று கமல்ஹாசனிடம் சாண்டி குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்
இதற்கு கமல்ஹாசன் நான் முதலில் செல்கிறேன். நீங்கள் எனக்கு அடுத்து வாருங்கள். நிறைய நிகழ்ச்சி இங்கே நடக்க போகிறது. நீங்கள் இருந்துவிட்டு வாருங்கள் என்று குறிப்பிட்டார்.

கோபம்
ஆனால் சாண்டி அதை கேட்காமல் தொடர்ந்து கமல்ஹாசனை தொல்லைச்செய்து கொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பிக்பாஸ், உடனே குறுக்கிட்டு ''சாண்டி நீங்கள் அப்படி எல்லாம் உள்ளே செல்ல முடியாது.'' என்று கோபமாக குறிப்பிட்டார். இதனால் அங்கிருந்த போட்டியாளர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ச்சி.அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











