20 வருஷமா பாதுகாத்த மானமெல்லாம் போச்சு.. பிக் பாஸ் நிகழ்ச்சியால் புலம்பும் முன்னணி பிரபலம்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தன்னுடைய மானமே போச்சு என்று முன்னணி பிரபலம் ஒருவர் மிகவும் வருத்தப்பட்டு புலம்பி வருகிறார்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இரண்டாவது சீசனை விட மூன்றாவது சீசன் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. அதேபோல் மக்கள் மத்தியிலும் இந்த சீசன் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

யார்
இந்த சீசனில் கலந்து கொண்ட எல்லோருமே ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்கள் என்றுதான் கூற வேண்டும். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் ஒருவராவது கெட்ட பெயர் எடுக்காமல் இருப்பார். ஆனால் இந்த முறையை எல்லோருமே விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டனர்.

என்ன மோசம்
அதிலும் சிலர் மிக மிக மோசமான விமர்சனங்களை பெற்றார்கள். சமூக வலைத்தளங்களில் சிலருக்கு எதிராக மோசமான கருத்துக்கள் விமர்சனங்களாக வைக்கப்பட்டது. போலீஸ் கேஸ் கூட இந்த நிகழ்ச்சி காரணமாக பதியப்பட்டுள்ளது.

இப்போது என்ன
இந்த நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தன்னுடைய மானமே போச்சு என்று முன்னணி பிரபலம் ஒருவர் மிகவும் வருத்தப்பட்டு புலம்பி வருகிறார். ஆம் திரையுலகில் முன்னணியில் இருந்த/ இருக்கும் அவர் தற்போது தன்னுடைய மானமே போச்சு என்று புலம்பி கொண்டு இருக்கிறார்.

காரணம் என்ன
இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன் அவருக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருந்ததாம். ஆனால் நிகழ்ச்சியில் அவர் தேவையில்லாமல் பேசி, சக ரூம் மேட்களிடம் தேவையில்லாத கருத்துக்களை கூறி கெட்டபெயரை சம்பாதித்து இருக்கிறார். வீட்டில் கூட அவர் மீது கோபத்தில் இருக்கிறார்களாம்.

என்ன குழப்பம்
இதனால் 20 வருடமாக அவர் காப்பாற்றி வந்த பெயரை கெடுத்துக் கொண்டோம் என்று புலம்பி வருகிறாராம். வெளியிலேயே இருந்திருந்தால் குறைந்தது நல்ல பெயராவது மிஞ்சி இருக்கும். இப்போது அதுவும் போய்விட்டது என்று நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











