ச்சே அதே நிலைமைதான் எனக்குமா?.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை!
பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனக்கு சினிமா வாய்ப்பு எதுவும் கதவை தட்டவில்லை என்று அதிர்ச்சியில் இருக்கிறார்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனக்கு சினிமா வாய்ப்பு எதுவும் கதவை தட்டவில்லை என்று அதிர்ச்சியில் இருக்கிறார்.
தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மூன்றாவது சீசன் தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது.
மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட பலரும் தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளனர். இதுவரை டிவியில் தோன்றாத ஆட்கள் கூட மக்கள் மத்தியில் வைரலாகி உள்ளனர்.

என்ன செய்தனர்
முதல் சீசன் மூலம் பிரபலம் அடைந்த ஆரவ், ஓவியா, ரைசா, ஜுலி ஆகியோர் நிறைய சினிமா வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். அதே போல் இரண்டாவது சீசனில் பிரபலம் அடைந்த ரித்திகா மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இன்னும் சிலர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.

இப்போது எப்படி
அதேபோல் இந்த சீசனில் கலக்கி வரும் லாஸ்லியா தற்போதே இரண்டு பட வாய்ப்புகளை பெற்று உள்ளார். அதேபோல் ராஜா ராணி சீசன் சீரியலில் நடிக்கவும் அவருக்கு தூது சென்றுள்ளது.

ஆனால் என்ன
ஆனால் முதல் சீசன் முதல் இப்போது வரை சிலர் பெரிய அளவில் நிகழ்ச்சியில் வைரல் ஆனாலும், சினிமா உலகில் பெரிதாக பிரேக் எதுவும் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக கலக்கினாலும் கூட இவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் பெரிதாக எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

யார் அவர்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்ச்சை நாயகி ஒருவர் தனக்கு சினிமா, அரசியல் எதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பி வருகிறாராம். அதற்கு முன்பு கூட சில படங்களில் தலை காட்டினோம். இப்போது அதுவும் இல்லை. பிக்பாஸ் சென்றதே வேஸ்ட் என்று புலம்பி வருகிறாராம்.

அட இல்லையே
அதேபோல் நிகழ்ச்சியில் பெரிதாக நமக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. மக்களும் நம்மை கிண்டல் செய்கிறார்கள் என்று புலம்பி வருகிறாராம். ஏற்கனவே இதேபோல் சிலர் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று பிக்பாஸ் வந்து கடைசியில் கெட்ட பெயர் எடுத்ததுதான் மிச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











