இதுமட்டும் நடக்கட்டும்.. லாஸ்லியாவிடம் அறை வாங்க தயார்.. கவின் நண்பர் பரபரப்பு சவால்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றிபெற்றால் அவரிடம் இருந்து அறை வாங்க தயார் என்று கவின் நண்பர் பிரதீப் டிவிட் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றிபெற்றால் அவரிடம் இருந்து அறை வாங்க தயார் என்று கவின் நண்பர் பிரதீப் டிவிட் செய்துள்ளார்.
தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மூன்றாவது சீசன் தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது.
மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட பலரும் தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் கவின் பெரிய அளவில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருந்தார்
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறினார். பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாட விருப்பமில்லை என்று கூறிவிட்டு அவர் வெளியேறிவிட்டார்.

அடுத்து என்ன
இந்த நிகழ்ச்சியில் ஒருநாள் கவின் நண்பர் பிரதீப், கவின் கன்னத்தில் அறைந்தார். பிக்பாஸ் வீட்டில் நீ சரியாக விளையாடவில்லை. விளையாடுவதை விட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறாய். அதனால் இந்த அறை என்று கூறி பிரதீப் கவின் கன்னத்தில் அறைந்தார்.

மேலும்
அதோடு நீ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒழுங்காக விளையாடி வெற்றிபெறு. அப்படி செய்தால் நான் உன்னிடம் கொடுத்த அறையை திரும்ப வாங்கி கொள்கிறேன், என்று குறிப்பிட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
ஏன் இப்படி
இந்த நிலையில் தற்போது பிரதீப் இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், கவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அதனால் நான் கவினுக்கு பதிலாக அவரின் காதலி லாஸ்லியாவிடம் இருந்து அறை வாங்க தயார்.

ஆனால் என்ன
ஆனால் நீங்கள் எல்லோரும் லாஸ்லியாவை வெற்றிபெற வைப்பீர்களா? அப்படி அவர் வெற்றிபெற்றால், நான் லாஸ்லியாவிடம் இருந்து அறை வாங்கி தயார் என்று பிரதீப் டிவிட் செய்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











