என்ன கண்ட்ராவி இது? பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்!
மும்பை: பிக்பாஸ் புகழ் நடிகை ஹினாகான் அணிந்த வித்தியாசமான ஆடையால் கிண்டலுக்கு ஆளானார்.
நடிகைகள் தாங்கள் அணியும் ஆடைகளுக்காக கிண்டல் செய்யப்படுவது வழக்கம் தான். ஆனால் கிண்டல் செய்யப்படுவதற்காகவே ஒரு நடிகை ஆடை அணிகிறார் என்று சொல்லுமளவுக்கு மாறிவிட்டார் இந்தி நடிகை ஹினா கான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹினா கான். இந்தி பிக்பாஸ் சீசன் பதினொன்றில் பங்கேற்று பிரபலமானார். ஃபியர் பேக்டர் என்ற ரியாலிட்டி ஷோவில் இரண்டாமிடம் பிடித்தார்.
இவருடைய ட்ரெஸிங் ஸ்டைலுக்காக பிக்பாஸ் ரசிகர்களிடையே பாராட்டுகள் பெற்றார். அதன்பிறகு அவ்வப்போது வித்தியாசமான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை ஷேர் செய்வார். ரசித்துக்கொண்டிருந்த நெட்டிசன்கள் ஒருகட்டத்தில் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.
சமீபத்தில் ஏர்போர்ட்டில் கேஷுவலாக நடப்பது போல வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அங்கங்கே வெட்டி ஒட்டப்பட்டது போல ஒரு ஸ்கர்ட், தோள்பட்டை அருகே கிழிந்ததுபோல் இருக்கும் டிஷர்ட் டாப், அதன்மேல் ஒரு ஜீன் ஜாக்கெட் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்ற ஆடையை யாராவது இலவசமாக கொடுத்தால் கூட அணிந்துகொள்ள மாட்டேன் என்றும், ஃபேஷன் பேரழிவு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











