18+ படம் பார்த்து அம்மாக்கிட்ட மாட்டிக்கிட்டேன்?.. ரிமோட்டும் வேலை செய்யாது.. ஜாக்குலின் ஓபன் டாக்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்று இறுதி வரை வந்து ரசிகர்களை மகிழ்வித்த பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 18 பிளஸ் படம் பார்ப்பது குறித்தும் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்தும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
லாக்டவுனுக்குப் பிறகு ஓடிடியில் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை குடும்பத்துடன் பலரும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு முன்னதாகவே பிரபலங்கள் எல்லாம் கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஸ்பார்டக்கஸ் என ஏகப்பட்ட ஹாலிவுட் வெப்சீரிஸ்களை பார்த்து வருகின்றனர்.

அந்த தொடர்களில் எல்லாம் அநியாயத்துக்கு ஆபாசக் காட்சிகளும் நிர்வாணக் காட்சிகளும் நிறைந்து கிடக்கும் நிலையில், அதை பார்ப்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் பிக் பாஸ் ஜாக்குலின். அவர் என்ன சொன்னாரு என்பது குறித்தும் முதன்முதலில் 18 பிளஸ் படத்தை எப்போ பார்த்தார் என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..
18+ படங்கள்: நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோ சினிமாஸ் என ஏகப்பட்ட ஓடிடி நிறுவனங்களுக்கு எந்தவொரு சென்சாரும் இல்லாத நிலையில், வெளிநாடுகளில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் அப்படியே சென்சார் செய்யாமல் நியூடிட்டி காட்சிகளுடன் அதிகம் வெளியாகி வருகின்றன. நல்ல திரைக்கதை கொண்ட த்ரில்லர் படங்கள், பெரிய நடிகர்கள் நடித்த வெப்சீரிஸ்கள் என அனைத்திலும் 18+ காட்சிகள் நிறைந்திருப்பதால் இந்திய ரசிகர்களும் அதையெல்லாம் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

முதல் முறையாக எப்போ பார்த்தேன்: 18+ படங்கள் என்றால் பிட்டு படம் எல்லாம் பார்க்க மாட்டேன். நான் ரொம்ப நல்ல பொண்ணு. ஆனால், வெப்சீரிஸ்களில் வரும் காட்சிகளை எல்லாம் ஆரம்பத்தில் தயங்கி தயங்கி பார்த்தேன். அதன் பின்னர், அதில் என்ன இருக்கு, இருக்கிறதை தானே காட்டுறாங்க என அசால்ட்டாக இப்போதெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். முதன் முதலாக எப்போது பார்த்தேன் என்றால் காலேஜ் படிக்கும் போது ஃபிலிம் ஃபெஸ்டிவல் எல்லாம் நடக்கும். அப்போது வெளிநாட்டு படங்களை பார்க்க வேண்டிய சூழல் வரும். அப்போது அந்த மாதிரி காட்சிகளை எல்லாம் பார்த்தது தான். ஆரம்பத்தில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், அது சினிமா என்பதால் அதை பார்க்கத் தொடங்கினேன் என்றார்.
அம்மாக்கிட்ட மாட்டிப்பேன்: டிவியில் வெப்சீரிஸ்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த மாதிரி காட்சிகள் வந்துவிடும். உடனடியாக அப்போதுதான் கரெக்ட்டா அம்மா வந்துடுவாங்க. என்னடி என்ன படம் பார்க்குற என கேட்பார்கள். அந்த நேரம் பார்த்து ரிமோட்டும் வேலை செய்யாது. படம் தான்மா பார்க்கிறேன். நீ வரும் போது அந்த சீன் வந்துடுச்சுன்னு சொல்லி சமாளித்துவிடுவேன். அவரும் திட்டிவிட்டு சென்றுவிடுவார் என்றார்.
யாருமே புரபோஸ் பண்ணல: உங்களை யாராவது புரபோஸ் பண்ணாங்களா என்கிற கேள்விக்கு கல்லூரியில் படிக்கும் போது நான் நல்லாவே இருக்க மாட்டேன். என்னை யாருமே புரபோஸ் பண்ணது கிடையாது என ரொம்பவே வருத்தத்துடன் கூறினார்.
கோலமாவு கோகிலா சான்ஸ் எப்படி கிடைத்தது?: விஜய் டிவியில் இருந்தே நெல்சன் அண்ணாவை நல்லா தெரியும். ஏதாவது படம் பண்றீங்களான்னு ஒருமுறை கேட்டேன். இல்லம்மா, பண்ணா சொல்றேன்னு சொல்லிட்டு போய்விட்டார். அதன் பின்னர், அவங்க டீமிலிருந்து ஒருநாள் எனக்கு போன் கால் வந்தது. அதன் பின்னர் நெல்சன் அண்ணாவை பார்த்த போது கோலமாவு கோகிலா படம் பண்றேன் நயன்தாராவுக்கு தங்கச்சி ரோல்னு சொன்னார். எந்த ரோலாக இருந்தாலும் பரவாயில்லை. சத்யம் தியேட்டரில் அந்த பெரிய ஸ்க்ரீனில் ஒரே ஒரு சீனில் வந்தாலே போதும் என நினைத்தேன். அதுதான் எய்ம்மாக இருந்தது. அது நிறைவேறியது ஹேப்பி எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











