டிஆர்பி டல்லடித்தால் உடனே ஜூலியை கதறி அழவிடுறாங்க பாஸ்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் ஜூலியை குறி வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் சோஷியல் மீடியா டிரெண்ட்படி நடத்துகிறார்கள். சமூக வலைதளங்களில் யாரை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அவர்களை பிக் பாஸ் வீட்டில் டார்கெட் செய்கிறார்கள்.
தற்போது மீண்டும் ஜூலி தான் சிக்கியுள்ளார்.

ஜூலி
சமூக வலைதளங்களில் ஜுலியை பற்றி அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும் அவரை டார்கெட் செய்யத் துவங்கிவிட்டனர். வியாபாரம் ஓடணும்ல பாஸ்.
காயத்ரி
பிக் பாஸ் வீட்டின் புதிய தலைவரான காயத்ரி ரகுராம் ஜூலியிடம் நடிக்காத, நடிக்காத ஒரிஜினலா இருந்தால் தான் நீ இங்க இருக்க முடியும் அதை நினைவில் வச்சுக்க என்று வார்னிங் கொடுக்கும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

ஓவியா
என்ன ஜூலி உம்முன்னு இருக்கு என்று ஓவியா ஜூலியிடம் கேட்கிறார். எவிக்ஷனில் உன் பெயர் இல்லை என்றதும் குளிர்விட்டுப் போச்சான்னு கேட்கிறாங்க என்று ஜூலி அழுது கொண்டே பேசுகிறார்.

கதறல்
காயத்ரி ரகுராம் திட்டியதால் ஜுலி கதறி அழுவது போன்று காட்டியுள்ளனர்.(கொடுத்த காசுக்கு நடிக்கணும்ல). காயத்ரியும், குண்டு ஆர்த்தியும் ஜூலியை மறுபடியும் வசைபாடுகிறார்கள். டிஆர்பியை ஏற்ற சொல்லிக் கொடுத்தபடியே ஜூலியை டார்கெட் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











