ஆர்ஜே.. எழுத்தாளர்.. பல திறமையுடன் பிக்பாஸில் நுழைந்த வைஷ்ணவி
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளராக ஆர்ஜே வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
Recommended Video

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மமதி சாரி, ஐஸ்வர்யா தத்தா, ஆர்ஜே வைஷ்ணவி- வீடியோ
சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளராக ஆர்ஜே வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீடு இப்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய போட்டியாளர்கள் வர தொடங்கி இருக்கிறார்கள். நடிகர்கள் இல்லாமல் இப்போதுதான் வேறு துறை நபர்கள் உள்ளே வர தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளராக ஆர்ஜே வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். சென்னையில் இருப்பவர்களுக்கு இவர் பெயர் கண்டிப்பாக தெரிந்திருக்கும். இவர் பெயர் மட்டுமே அந்த கடகட தமிழும் தெரிந்திருக்கும்.
நிறைய எழுத கூடிய இவர், எழுத்தாளர் சாவியின் பேத்தி என்பது கூடுதல் தகவல். பல திறமைகளுடன் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications