யாருமே பாக்குறது இல்லை.. மூட்டையை கட்ட வேண்டியதுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா?
கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எண்டோமால் ஷைன் இந்தியா நிறுவனம் நினைத்து கூட பார்த்து இருக்காது.
Recommended Video
சென்னை: கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எண்டோமால் ஷைன் இந்தியா நிறுவனம் நினைத்து கூட பார்த்து இருக்காது.
உலகம் முழுக்க பல நாடுகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
எண்டோமால் ஷைன் என்ற நிறுவனம்தான் உலகம் முழுக்க இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறது. இதற்காக இந்த நிறுவனத்தின் கிளை பல நாடுகளில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியா
இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. முக்கியமாக கன்னடம் மற்றும் ஹிந்தியில் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் ஹிட் அடித்தது. தமிழ் தெலுங்கில் தாமதமாக தொடங்கப்பட்டாலும் தற்போது இந்த நிகழ்ச்சி பெரிய வைரலாகி உள்ளது.

தமிழ் எப்படி
அதிலும் தமிழில் மூன்றாவது சீசன் பெரிய ஹிட் ஷோவாக மாறி உள்ளது. மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட பலரும் தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளனர். இதுவரை டிவியில் தோன்றாத ஆட்கள் கூட மக்கள் மத்தியில் வைரலாகி உள்ளனர்.

மலையாளம் எப்படி
ஆனால் கேரளாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அங்கு முதல் சீசனை மோகன் லால் தொகுத்து வழங்கினார். அந்த சீசன் கொஞ்சம் தொடக்கத்தில் டிஆர்பி பெற்றது. கொஞ்சம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் போக போக அந்த நிகழ்ச்சி விறுவிறுப்பின்றி போனது.

என்ன ஆனது
இதனால் மலையாளத்தில் அந்த ஷோ பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் முடிந்தது. இதனால் நிகழ்ச்சி குழுவிற்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஆகவே அங்கு இன்னும் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கப்படாமல் இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 2 ஏன்
முதல் சீசன் தோல்வி காரணமாக அங்கு இரண்டாவது சீசனை தொடங்க பிக்பாஸ் குழு யோசித்து வருகிறது. முதல் சீசன் போலவே இரண்டாவது சீசன் தோல்வி அடைந்தால் பெரிய இழப்பு ஏற்படும். அதனால் யோசித்து கால் வைக்கலாம் என்று நிகழ்ச்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











