»   »  ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி குண்டு ஆர்த்தி சொல்வது உண்மையா?: இல்ல இது டிஆர்பி ஸ்டண்டா?

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி குண்டு ஆர்த்தி சொல்வது உண்மையா?: இல்ல இது டிஆர்பி ஸ்டண்டா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியால் தான் டிஆர்பி ஏறுகிறது என்பதை புரிந்து கொண்ட பிக் பாஸ் புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி துவங்கிய போது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது தான் ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலியானாவை கட்டம் கட்டினார்கள்.

உடனே டிஆர்பி ஏறியது. அதில் இருந்து அவரை குறி வைத்தார்கள்.

மீம்ஸ்

மீம்ஸ்

ஜூலியையே வைத்து நிகழ்ச்சியை ஓட்டப் பார்க்குறீங்களா என்று ரசிகர்கள் ஆளாளுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டனர், சமூக வலைதளங்களில் துப்பித் துப்பி மீம்ஸ் போட்டனர்.

ஓவியா

ஓவியா

ஆளாளுக்கு திட்டுவதை பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓவியாவின் பக்கம் கவனத்தை திருப்பினர். ஆனால் ஜூலியை கட்டம் கட்டியபோது ஏற்பட்ட பரபரப்பு ஓவியாவால் ஏற்படவில்லை.

ஜூலி

ஜூலி

ஓவியா வேலைக்கு ஆகாது என்று நினைத்து மீண்டும் ஜூலியையே குறிவைத்துவிட்டனர். அதற்கு சான்றுபோல் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நமீதா

எல்லா கேமராவும் அவளையே தான் பார்க்கணும்னு நினைக்கிறா, அரசியல் தலைவர்களை கெட்ட வார்த்தையால் திட்டினா, நீ போய் கத்திட்டு வந்துட்ட எல்லா பசங்களுக்கும் அடி விழுந்தது, எல்லோருக்கும் அடிவிழப் போகுதுன்னு எங்களுக்கு காலை 4.30 மணிக்கே நியூஸ் வந்து நாங்க எல்லாம் போயிட்டோம் என்றாள் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

English summary
Big Boss Tamil organisers have released a new video in which Arthi, Namitha and Gayathri Raghuram are targerting Juliana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil