பிக்பாஸ் 2 : ஐஸ்வர்யா இயல்பாவே அப்டித்தானாம்.. முகமூடி எல்லாம் போட்டுக்கலையாம்!

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நிஜத்திலும் முன்கோபி தான் என இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

முகமூடி எல்லாம் இல்லையாம்... நிஜத்திலும் ஐஸு அப்டித்தானாம்!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா, நிஜத்திலும் எளிதில் கோபப்படும் குணாதிசியம் கொண்டவர் தான் என அவரது பட இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. சட்டென கோபப்படுவது, மனதில் பட்டதை இயல்பாய் பேசுவது, வேக்கப் சாங்கிற்கு டான்ஸ் ஆடுவது என குட்டி ஓவியாவாக அந்த வீட்டில் அவர் வலம் வருகிறார்.

அதோடு, கடந்த சீசனைப் போலவே, இம்முறையும் பிக்பாஸ் தொடங்கிய சில தினங்களிலேயே ஐஸ்வர்யாவிற்கு, ஷாரிக்கிற்கும் காதல் மலர்ந்தது, அவர்கள் பேசிக் கொள்வது, சண்டை போட்டுக் கொள்வது போன்ற காட்சிகளை பார்க்கும்போது, ஓவியா - ஆரவ் காதல் காட்சிகள் தான் பார்வையாளர்களின் நினைவிற்கு வருகிறது.

முன்கோபம்:

முன்கோபம்:

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் ஓவியா மாதிரியே வீட்டை விட்டு வெளியேறப் போகிறேன், எனக் கூறி சக போட்டியாளர்களிடம் கோபித்துக் கொண்டு சண்டை போட்டார். இதனால் அவர் பிக்பாஸ் வீட்டின் இன்னொரு ஓவியாவாக மாற முயற்சிக்கிறார் என பார்வையாளர்கள் விமர்சித்தனர்.

ஷூட்டிங்கிலும் இப்படித்தான் :

ஷூட்டிங்கிலும் இப்படித்தான் :

ஆனால், நிஜத்திலும் எதற்கெடுத்தாலும் சட்டென கோபப்படும் கேரக்டர் தானாம் ஐஸ்வர்யா. தற்போது அவர் நடித்துள்ள, ‘சோம பான ரூப சுந்தரன்' படப்பிடிப்பு தளத்திலும் இப்படித் தான் அவர் நடந்து கொள்வாராம்.

காதல் பிரச்சினை:

காதல் பிரச்சினை:

பிக்பாஸில் இருப்பது போல், நிஜத்திலும் யார், எவர் என்று பார்க்காமல் கோபப்படுவாராம். ஒருவர் மீது ஏற்படும் கோபத்தை மற்றவர்கள் மீதும் காட்டுவாராம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷாரிக் மீது ஏற்பட்ட கோபத்தை, யாஷிகா, மஹத் போன்றோர் மீதும் காட்டியது நினைவுக் கூரத்தக்கது.

நிஜமுகம்:

நிஜமுகம்:

எனவே, ‘கமல் கூறியது போல் மற்ற போட்டியாளர்கள் முகமூடி போட்டு நடித்தாலும், ஐஸ்வர்யா தனது இயல்பான குணத்துடனேயே பிக்பாஸ் வீட்டில் வசித்து வருவதாகவும், பிக்பாஸில் இருந்து வெளியே வரும் போது, கோபத்தை குறைத்து நல்ல முதிர்ச்சியுடன் அவர் வெளியே வருவார் என நம்புவதாகவும்' சோம பான ரூப சுந்தரன் பட இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X