பிக்பாஸ் 2 : ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ‘கம்பி’ எண்ண வைக்கப்போகும் பிக்பாஸ்!

பிக்பாஸ் சீசன் 2 வீட்டில் சிறை போன்ற அறை ஒன்று புதிதாக சேர்ந்துள்ளது.

Recommended Video

ஸ்மோக்கிங் ரூமை டாய்லெட்டுக்கு மாத்திய பிக் பாஸ் புது வீடு- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக போடப்பட்டுள்ள செட்டில், முந்தைய சீசனில் இல்லாத புதுவரவாக சிறை ஒன்று உள்ளது.

வரும் ஞாயிறு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக்பாஸ் சீசன் 2. இந்த நிகழ்ச்சிக்காக முந்தைய சீசனுக்கு செட் போடப்பட்ட இடத்திலேயே பல புதிய மாறுதல்களுடன் கலர்புல் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.

Bigboss 2 Tamil : prison for offenders

புதிதாக பெண்கள் படுக்கை அறையில் கழிப்பறை ஒன்றைச் சேர்த்ததைத் தவிர, பெரும்பாலும் முந்தைய வீட்டில் இருந்தது போன்றே வீட்டின் அமைப்பு உள்ளது. சுவரின் வண்ணத்தை மாற்றி, உள் அலங்காரம் மட்டும் மாற்றியுள்ளனர்.

இதற்கு மாறாக வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் புதிதாக முளைத்திருப்பது தான், சிறை போன்ற அறை. சுற்றிலும் கம்பிகளால் மூடப்பட்டுள்ள அந்த அறையில், ஒரு இரும்புக் கட்டிலும், ஒரு லைட்டும் மட்டுமே உள்ளது. மற்றபடி மின்விசிறிகளோ, ஏசியோ எதுவும் இல்லை.

இதைப் பார்க்கும்போது, கடந்த சீசனில் சுஜா வருணி தனிமைச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டது தான் நினைவிற்கு வருகிறது. ஏறக்குறைய இதுவும் அதுபோன்றே உள்ளது. ஆனால் வீட்டில் ஒரு அங்கமாக இது இருப்பதால், நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் தவறு செய்பவர்கள், தண்டனையாக இந்த அறையில் அடைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X